காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) தனது 50ஆம் ஆண்டை எதிர்நோக்கியுள்ளது. பொன்விழா ஆண்டு என்பதால், நடப்பாண்டு போட்டிகள் அனைத்தும் விமரிசையாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
பொன்விழாவை முன்னிட்டு, காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.முஹம்மத் ஷுஅய்ப் என்பவரது மகன் - பெங்களூருவிலுள்ள பன்னாட்டு நிறுவனத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஸாமு ஷிஹாபுத்தீன் வடிவமைத்த இலச்சினை, ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் 50ஆம் ஆண்டு நிறைவுக்கான இலச்சினையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தி - தான் விரும்பும் படங்களை தபால்தலையாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நடுவண் அரசின் திட்டத்தின் கீழ் இந்த இலச்சினை தபால் தலையாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாங்காங்கிலிருந்து...
இம்ரான் உஸைர்
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
2. Re:...VAALTHUKKAL posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[08 March 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39527
பொன் விழா காணும் ஐக்கிய விளையாட்டு சங்கதிற்கு எனது வாழ்த்துக்கள் .
மேலும் சகோதரர் ஸாமு ஷிஹாபுத்தீன் வடிவமைத்த ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் 50ஆம் ஆண்டு நிறைவுக்கான
இலச்சினை மிகவும் அருமையாகவும் & பாராட்டும் படியாகவும் உள்ளது . அவருக்கு எனது பாராட்டுக்கள் .
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[08 March 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39530
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்....நமது USC விளையாட்டு அரங்கின் ....இந்த 50ஆம் ஆண்டு நிறைவு தபால்தலை வெளியீடு....என்பது ரொம்பவும் அவசியமானதே ......இதை வடிவமைத்த நம் அருமை சகோதரர் அவர்களை மனதார பாராட்டலாம் ...
தம்பி உன்னுடைய தொலை தூர நோக்க பார்வை தொடரட்டும் .....
நமது USC நேற்று தான் ஆரபித்தது போன்ற எண்ணம் நம் யாவர்களுக்கும் தோன்றுகிறது ....நான் மிக சிறுவனாக இருந்த காலத்தில் மிகவும் ஆர்வமுடன் இப் போட்டியை கண்டு கழிப்பேன் ..... அந்த நினைவு இப்போதும் மனதில் தோன்றுகிறது ......
நம் ஊரின் முக்கியமான ஒரு பொழுது போக்கு என்றால் நமது USC அரங்கின் .....விளையாட்டு தான் ....மீண்டும் மிகவும் சிறப்பாக இந்த அரங்கின் விளையாட்டுக்கள் தொடர வேணும் என்பது தான் நம் ஊர் அனைத்து மக்களின் ஒரே எண்ணம் .....
வல்ல இறைவன் சிறப்பாக்கி அருள்வானாகவும் ஆமீன்.....
USC அரங்கின் அனைத்து மன்ற தலைவர் & உறுப்பினர்கள் அனைவர்களையும் மனதாரவே பாராட்டுகிறோம் & அவர்களின் உழைப்பை நினைத்து மனது பெருமை படுகிறது
......
வஸ்ஸலாம்
4. Re:...பொன்விழா தபால் தலை posted bymackie noohuthambi (colombo)[08 March 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39534
2015 ம் ஆண்டு பொன்விழா இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் வண்ணங்கள் கவர்ச்சியாக இருக்கின்றன. இளைய தலைமுறையின் சிந்தனை வெளிப்பாடு சிறகடித்து பறக்கிறது வாழ்த்துக்கள்.
நடுவண் அரசு அதை தபால் தலையாக வெளியிடவும் அனுமதித்துள்ளது அப்படி இருக்க தபால் தலையில் 2014 என்று இருக்கிறதே, இது ஏதோ "நடுவுல ஒரு பக்கத்தை காணோம்" என்பது போல இருக்கிறதே, விஷயம் தெரிந்தவர்கள் இந்த கருத்து பதிவு பகுதியில் விளக்கம் தந்தால் நாம் புரிந்து கொள்ளலாமே..
7. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[10 March 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39556
நம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் 50ஆம் ஆண்டு நிறைவு கால்பந்து போட்டி மிக சிறப்பாக நடைபெற வாழ்த்தி இறைஞ்சுகிறேன்.
காயல்பட்டினத்தின் பெருமைகளில் இந்த கால்பந்து போட்டியும் ஒன்று.
புதிதாக சந்திக்கும் எந்த ஒரு சகோதரரிடமும் என் ஊர் காயல்பட்டினம் என்று அறிமுகப்படுத்தியதும், உடனே அவர்களிடம் இருந்து கால்பந்து போட்டி நடக்குமே அந்த ஊரா என்பர், சிலர் உங்க ஊர் கால்பந்து போட்டிக்கு வந்து இருக்கின்றேன் என்பர், சிலர் நான் சிறுவனாக இருக்கும் சமயம் என் தாத்தாவுடன் கால்பந்து பார்க்க உங்க ஊருக்கு வந்து இருக்கின்றேன், இன்னும் நடைபெறுகின்றதா என்று உடனே ரிப்ளை பண்ணுவார்கள். பெருமையாக இருக்கும்
போற்றுதலுக்குரிய மாபெரும் தலைவர் மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களின் திருப்பெயரில் கடந்த 49 ஆண்டு காலமாக
நம் காயலில் கால்பந்தாட்டச்சுற்றுப் போட்டியை நடத்திடும்
பேரமைப்பான ஐக்கிய விளையாட்டுச் சங்கம் இவ்வாண்டு
பொன்விழாவைப்பெருமையுடனும்,பெருமகிழ்வுடனும்
நடத்த இருப்பது மிக பாராட்டுக்குரியது.
இது சார்ந்த அனைத்து நிகழ்வுகள் யாவும் நனிசிறப்புடன் நடந்தேற
வல்ல நாயன் அல்லாஹ் நல்லுதவி புரிவானாக ஆமீன்.வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross