“புகைப்படப் பிரியன்” குழுமத்தின் சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், புகைப்படக் கண்காட்சியும், போட்டியும் இம்மாதம் 07, 08 (சனி, ஞாயிறு) நாட்களில் நடைபெற்றது. 07ஆம் நாளன்று காலை 09.30 மணிக்குத் துவங்கிய கண்காட்சியை, நாகர்கோவில் நகர்மன்றத் தலைவர் மீனாதேவ் துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களின் 1200க்கும் மேற்பட்ட படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள், ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ நகரில் பணியாற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத் உடைய 30 படங்களும் அடக்கம்.
[கீழ்க்காணும் படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
அபூதபீ நகரின் பிரம்மாண்டமான Grand Mosque - பெரிய பள்ளிவாசலை இரவு நேர ஒளி வெள்ளத்தில் பதிவு செய்த அவரது படம் “Photo of the Day”பிரிவில் வெற்றிபெற்றது.
இதற்காக அவருக்கு, கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் விஷ்மிஜி விஸ்வநாதன் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
|