காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் (18ஆவது வார்டு) உறுப்பினர் - காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த காசிராஜன், இன்று காலையில் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 64. அன்னார்,
சண்முகத் தேவர் - வள்ளியம்மாள் தம்பதியின் மகனும்,
இசக்கியம்மாள் என்பவரின் கணவரும்,
கே.ஆனந்த், கே.ரமேஷ், கே.முனீஸ், கே.சுப்புலட்சுமி ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள், காட்டு தைக்கா தெரு மேற்புறமுள்ள இடுகாட்டில் நாளை (மார்ச் 12) நடைபெறவுள்ளது. நேரம் அறிவிக்கப்படவில்லை.
மறைந்த காசிராஜன், காயல்பட்டினம் உள்ளாட்சி மன்றத்தில் தொடர்ந்து 1986, 1996, 2001, 2006 ஆகிய நான்கு பருவங்களில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிவர் என்பதும், 2011இல் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[கூடுதல் தகவல்கள், படம் இணைக்கப்பட்டன @ 16:39 / 11.03.2015] |