ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றம் சார்பில், இம்மாதம் 27ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, ‘காயலர் தினம் 2015’ எனும் தலைப்பில், காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக அதன் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மார்ச் 27 வெள்ளிக்கிழமை அன்று துபை அல் ஸஃபா பூங்காவில் அமீரகவாழ் காயலர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஒன்றுகூடும் பொதுக்குழுக் கூட்ட நிகழ்ச்சி “காயலர் தினம் 2015” நடைபெறும் என்று கடந்த 06.03.2015 வெள்ளியன்று நடந்த துபை காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாலை 5 மணியளவில் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்களது இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் டி.ஏ.எஸ். மீரா ஸாஹிப் அவர்கள் தலைமை தாங்கினார்.
முன்னதாக மன்றத்தின் ஆலோசனைக் குழு மூத்த உறுப்பினர் இராவன்னா அபுல் ஹசன் அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
எதிர்வரும் மார்ச் 27 வெள்ளிக்கிழமை அன்று துபை அல் ஸஃபா பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அமீரகவாழ் காயலர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஒன்றுகூடும் பொதுக்குழுக் கூட்டம் “காயலர் தினம் 2015” நடைபெறும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு அமீரகவாழ் காயலர்கள் அனைவரும் குடும்பத்துடன் திரளாக இக்கூட்டத்தில் வந்து கலந்துகொள்ளுமாறும் செயற்குழுக் கூட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இறுதியில் இறைப் பிரார்த்தனையுடன் செயற்குழுக் கூட்டம் நிறைவுற்றது.
இது குறித்து மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அன்புள்ளம் கொண்ட துபை காயல் நல மன்றப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அமீரக வாழ் காயலர்களுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் இம்மாதம் (மார்ச்) 27ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று துபை காயல் நல மன்றப் பொதுக்குழு கூட்டம் வழமை போல் ஸத்வாவில் அமைந்துள்ள அல் ஸஃபா பூங்காவில் வைத்து காலை 10 மணி முதல் நடைபெறும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பொதுக்குழு கூட்டம் "காயலர் தினம் 2015" எனக் கொண்டாடப்படுவதால் இந்த நிகழ்வில் ஓன்று கூடல், சாப்பாடு, பெரியோர் - சிறார்கள் விளையாட்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமே காணப்படும். வழமை போல் பொதுக்குழு கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் தாங்களும் குடும்பத்தார்கள் மற்றும் காயல் நண்பர்கள் புடைசூழ வருகை புரிந்து கூட்டத்தை சிறப்பிப்பதோடு நமது நலமன்றம் மென்மேலும் சாதனைகள் புரிவதற்கு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிடவும் உளமாற கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் இந்த கூட்ட நிகழ்வை முன்னரே அறிவிப்பது தாங்கள் அனைவரும் முற்கூட்டியே திட்டமிட்டு இந்த நிகழ்வில் குடும்ப / காயல் நண்பர்கள் சகிதம் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்ற அவாவில்தான்.
வருகை புரிவோரை வரவேற்கவும், திட்டமிட்ட உணவு மற்றும் விளையாட்டு நிகழ்சிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்ய அதிகமான தன்னார்வ தொண்டுள்ளம் கொண்ட சகோதரர்கள் தேவைப்படுவதால், தயவு செய்து தாங்களாகவே முன் வந்து மன்றத்தின் பொது தொடர்பாளர் சகோதரர் ஈசா அவர்களை அலைபேசி எண் 055-4063711 க்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இக்கூட்டத்திற்கு முற்கூட்டியே வருகை புரிவோரை ஊக்குவிக்கும் பொருட்டு கூட்ட நிகழ்விடத்திற்கு காலை 11 மணிக்குள் வருவோருக்கு சிறப்பு குலுக்கல் பரிசுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்:
M.S.அப்துல் ஹமீத்
துபை காயல் நல மன்றம் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட காயலர் தினம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |