உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியருக்காக, இம்மாதம் 13ஆம் நாள் முதல் 17ஆம் நாள் வரை கல்வி ஒளிபரப்பு நடைபெறுகிறது.
இதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-
இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியரின் கல்வித் திறனைப் பெருக்கிடும் பொருட்டும், அரசுத் தேர்வில் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்றிட வேண்டும் என்ற நோக்கோடும், வழமை போல இவ்வாண்டும் - இம்மாதம் 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, காயல்பட்டினம் நகரின் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான IIM TV மற்றும் Channel 7 -TV யில் , பின்வருமாறு கல்வி ஒளிபரப்பு நடைபெறுகிறது.
பல்வேறு கல்வி நிறுவனங்களின் திறமை மிக்க ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இக்கல்வி ஒளிபரப்பை, இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியர், குறித்த காலத்தில் அவசியம் பார்த்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இந்த ஒளிபரப்பு குறித்த நிகழ்ச்சி கால அட்டவணை பிரசுரம், நகரின் அனைத்து கல்வி நிறுவனங்களின் மூலமும் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு விநியோகிக்க வழங்கப்பட்டுள்ளது. எனினும் இச்செய்தியைப் படிக்கும் யாராயினும், உங்களுக்கு அறிமுகமான பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு இதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, அவர்களைப் பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூர் மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி, சிறந்த சாதனைகள் பல புரிவதற்கும், கற்ற கல்வியைக் கொண்டு மாணவ-மாணவியர் - அவர்கள்தம் குடும்பத்தார், உற்றார் - உறவினருக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் நற்பயனளிக்கவும் அருள் புரிவானாக ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E. மஹ்மூது
மக்கள் தொடர்பாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம்
இக்ராஃ கல்விச் சங்கத்தின் 10ஆம் வகுப்பு கல்வி ஒளிபரப்பு குறித்த கடந்தாண்டு (2014) செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |