இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 68ஆவது நிறுவன நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பிறைக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
துவக்கத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற பெயரில் செயல்பட்டு, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாளன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்களால் துவக்கப்பட்டு, முஸ்லிம் சமுதாயத்தின் பேரியக்கமாக இன்று வரை இறையருளால் இயங்கி வருகிறது.
கட்சியின் நிறுவன நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் மாதம் 10ஆம் நாளன்று, நாடு முழுவதிலுமுள்ள - கட்சியின் அனைத்து கிளைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் பிறைக்கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு சமுதாய விழிப்புணர்வூட்டப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இன்று (மார்ச் 10, 2015) 17.00 மணியளவில், பேருந்து நிலையம் முன்பு பிறைக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையேற்று, பிறைக்கொடியேற்றி, உரையாற்றினார்.
நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூற, மூத்த நிர்வாகி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
கட்சியின் சுதந்திர தொழிலாயர் யூனியன் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் ஆர்.பீ.ஷம்சுத்தீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர துணைச் செயலாளர் எம்.இசட்.சித்தீக், இளைஞரணி நகர செயலாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், மாணவர் பேரவை நகர அமைப்பாளர் எச்.எல்.அப்துல் பாஸித், நகர நிர்வாகிகளான பெத்தப்பா சுல்தான், எலக்ட்ரீஷியன் பஷீர், ஜெய்லானீ உள்ளிட்ட கட்சியினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாளை முன்னிட்டு 2013ஆம் ஆண்டு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |