தூத்துக்குடி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் முதலிடம் பெற்று, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கரங்களால் பரிசு பெற்றுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், இந்திய பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் சார்பாக, தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
மாவட்டம் முழுவதிலுமிருந்து பங்கேற்ற மாணவ-மாணவியருள், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் பா.முஹம்மத் ஷம்சுத்தீன் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு, இம்மாதம் 07ஆம் நாளன்று, தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன் பரிசு வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸ், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பா.ரெத்தினம், திருச்செந்தூர் வட்டார ஆசிரியர் பயிற்றுநர் ராமநாதன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
மாவட்ட அளவில் முதலிடம் பெற்றமைக்காக மாணவர் பா.முஹம்மத் ஷம்சுத்தீனை, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.மஸ்னவீ, செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப், தலைமையாசிரியர் கே.ஷாஹுல் ஹமீத் வாவு அறக்கட்டளை உறுப்பினர்கள், நிர்வாக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் அ.பீர் முஹம்மத் ஹுஸைன்
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |