தமிழக அரசு, 2012ம் ஆண்டு - The Tamil Nadu Urban Local Bodies (Installation of Closed Circuit Television Units in Public
Buildings) Rules 2012 என்ற சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி - பொது இடங்களில், மக்கள் பாதுகாப்புக்காக, CCTV கேமராக்கள் பொருத்துவது அவசியமாகும்.
நகரின் பொது இடங்களில் - CCTV கேமராக்கள் பொறுத்த, நகர்மன்றம் சமீபத்தில் அனுமதி மறுத்தது.
ஆறுமுகநேரி காவல் நிலையம் ஆய்வாளர், CCTV கேமாராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து மீண்டும், நகராட்சிக்கு நினைவூட்டி கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து நகர்மன்றத் தலைவர், ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவு வருமாறு:
2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட The Tamil Nadu Urban Local Bodies (Installation of Closed Circuit Television Units in Public
Buildings) Rules 2012 சட்டம், CCTV கேமராக்களை பொது இடங்களில் கட்டாயமானதாக ஆக்கினாலும், துணிக்கடைகள், ரயில்வே நிலையங்கள்
போன்றவற்றின் மூலம் அவை நம் வாழ்வில் நுழைந்து பல ஆண்டுகள் ஆகிறது.
காயல்பட்டினத்தின் பொது இடங்களிலும் CCTV கேமராக்களை துரிதமாக நிறுவிட - காவல்துறை, சில மாதங்களுக்கு முன் - நகராட்சிக்கு கடிதம்
அனுப்பியிருந்தது.
அக்டோபர் 2014இல் நடந்த நகர்மன்ற கூட்டத்தில், அக்கடிதமும் பொருளாக வைக்கப்பட்டிருந்தது. ஜமாதுகளிடமும், பொது நல அமைப்புகளிடமும்
கலந்தாலோசனை செய்து தான் தங்களால் இது குறித்து சம்மதம் தெரிவிக்க முடியும் என உறுப்பினர்கள் கூறவே அப்பொருள் ஒத்திவைக்கப்பட்டது.
நவம்பர் 2014இல் அப்பொருள் மீண்டும் அஜெண்டாவில் வைக்கப்பட்டது. ஆனால் - நகர்மன்ற வளாகம் தவிர, வேறு பொது இடங்களில் - CCTV
கேமராக்கள் நிறுவ, பெருவாரியான உறுப்பினர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அரசு சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மன்றத்திற்கு
அனுமதி கிடையாது என்றாலும், உறுப்பினர்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் அத்தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
கடந்த மாதம் இறுதியில் பேருந்து நிலைய வளாகத்தில் நடந்த அதிர்ச்சியளிக்க கூடிய கொலை சம்பவம் குறித்து அனைவரும் கேள்விபட்டிருப்பீர்கள்.
காயல்பட்டினம் பேருந்து நிலையம் - சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவது குறித்து, காவல் துறைக்கு தொடர்ந்து நான் புகார் தெரிவித்து
வந்த்துள்ளேன். கொலை சம்பவத்தை தொடர்ந்து, அச்சம்பவம் குறித்தும், இன்னும் சில விஷயங்கள் குறித்தும் - மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளரிடம் அண்மையில் புகார் தெரிவித்து வந்தேன்.
தற்போது மீண்டும் - காவல்துறை மூலம்,
காயல்பட்டினம் பேருந்து நிலையம்,
காயல்பட்டினம் - ஆறுமுகநேரி புறவழிச்சாலை சந்திப்பு பகுதி,
கஸ்டம்ஸ் சாலை சந்திப்பு,
பெரிய நெசவு தெரு - கூலக்கடை பஜார் சந்திப்பு,
காயல்பட்டினம் கடற்கரை
போன்ற பொது இடங்களில் CCTV கேமராக்கள் நிறுவவும்,
சமூக விரோதிகள் பதுங்க தோதுவாக இருக்கும்
கொம்புத்துறை முதல் ஓடக்கரை வரை கடற்கரை ஓரத்தில் உள்ள உடைகளை அகற்ற கோரியும், நகராட்சிக்கு கடிதம் வந்துள்ளது.
அனைத்து மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய இந்த நடவடிக்கைகளுக்கு, நகரின் அனைத்து ஜமாத்துகளும், பொது நல
அமைப்புகளும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|