திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், “மக்கள் விரோத அதிமுக அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், காயல்பட்டினம் நகராட்சியின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்தும்” என்ற தலைப்பில், இம்மாதம் 12ஆம் நாள் வியாழக்கிழமையன்று 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காகதி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நகர அவைத்தலைவர் ஜெ.எம்.கிதர் முகம்மது, துணைச் செயலாளர் கே.சபாபதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூர் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, ஆறுமுகநேரி நகர செயலாளர் ஜி.ஆர்.ராஜசேகரன், மாவட்ட பிரதிநிதிகளான ஏ.பன்னீர் செல்வன், எஸ்.ஏ.காதர் சாகிப், தங்கம் கஸ்ஸாலி, நகர பொருளாளர் எஸ்.எச்.தாஜுத்தீன், கூடுதல் செயலாளர் எல்.சி.ராணி, முன்னாள் துணைச் செயலாளர் ஏ.எஸ்.ஆறுமுகம், இளைஞரணி அமைப்பாளர் பீ.எம்.அப்துல் காதர், இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் ஆர்.எஸ்.கோபால், மாணவரணி நகர அமைப்பாளர் கணேஷ்பதி, மீனவரணி நகர அமைப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை தாங்கிய கட்சியின் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையுரையாற்றினார். காயல்பட்டினம் நகராட்சியில், தலைவருக்கும் - உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக 950க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தனதுரையில் குற்றஞ்சாட்டினார்.
நகர துணைச் செயலாளரும், பேச்சாளருமான ஆர்.எஸ்.கணபதி வரவேற்றுப் பேசினார். வேல் ராமகிருஷணன், கதிர் மீனாட்சி சுந்தரம், பி.பி.சி.பாலப்பா, தலைமை நிலைய செயற்குழு உறுப்பினர் ஜெ.ஜெயக்குமார் ரூபன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.ராஜ்மோகன் செல்வின், தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வில்சன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் என்.பீ.ஜெகன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தலைமைக் கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.
அதிமுக அரசு மக்கள் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், ‘மக்கள் முதல்வர்’ என்ற பெயரில் மறைமுக முதல்வராக ஜெயலலிதா செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
17ஆவது வட்டப் பிரதிநிதி முகம்மது அலி ஜின்னா நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கட்சியினரும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
வட்டச் செயலாளர்களான வில்சன், பீ.கே.டீ.உமர், முஹம்மது மீராசாகிபு, நவ்பல், செய்யது, என்.எஸ்.அஜ்வாஜ், மொகுதூம், சதக் உமர், முகைதீன் தம்பி, சம்சுதீன், மாதவன், ரவீந்திர பாரதி, ஞானசேகர், சாமு, மஹ்மூது, ஜெய்னுல் ஆப்தீன், உதயசூரியன்,
வட்டப் பிரதிநிதிகளான வேலு அந்தோணிராஜ், ஜாபர் சாதிக், செய்யது முஹமது புகாரீ, முஹம்மது மெய்தீன், செய்யது இப்றாஹீம், காதர் சாகிபு, தஸ்நேவிஸ், செய்யது முஹம்மது கசாலி, முருகன், அபுல்ஹஸன், பீர் முஹம்மது, சுப்பையா, சித்திரைவேல், இ.முருகன், சுப்பிரமணியன், அரிகரபுத்திரன், முத்துராஜ், சொக்கலிங்கம், பாஸ்கர், கசாலி மரைக்காயர்,
இளைஞரணி நிர்வாகிகளான தமிழ்வண்ணன், தாமஸ், பாலசுபாஷ், பட்டுராஜன்,
மாணவரணி நிர்வாகிகளான சிவபெருமாள், ராஜ்கமல், கார்த்திக்,
மீனவரணி நிர்வாகிகளான ஜேசுதாஸ், சேசு, ஜுடு உள்ளிட்டோரின் ஒத்துழைப்புடன், நகரச் செயலாளர் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
படங்களில் உதவி:
தாஸ் ஸ்டூடியோ (கூலக்கடை பஜார்)
திமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |