மைக்ரோகாயல் அமைப்பின் காயல் மெடிக்கல் கார்டு (KAYAL MEDICAL CARD) மற்றும் Chronic Detection and Treatment (CDT) க்கான விண்ணப்பங்கள் மார்ச் 23 முதல் விநியோகிக்கப்படுகின்றன. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
அஸ்ஸலாமு அலைக்கும்,
மைக்ரோகாயல் மற்றும் ஷிஃபா ஹெல்ட் அண்ட் வெல்பேர் அசோசியேசன் நம் KMT மருத்துவமனையுடன் இணைந்து பைலட் ப்ராஜக்ட் என்ற முறையில் 2013 செப்டம்பர் முதல் 2014 மார்ச் வரை சுமார் 50 பயனாளி குடும்பங்களுக்கும், 2014-2015 நிதியாண்டில் சுமார் 220 பேருக்கும் இந்த காயல் மெடிக்கல் கார்டு வழங்கி இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ கன்சல்டேசன், பரிசோதனைகள், மருந்துகள் ஆகியவற்றின் மதிப்பில் 25% மட்டும் பயனாளிகளால் செலுத்தி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நல்ல மருத்துவ சேவையை பெற்றுள்ளனர்.
மைக்ரோகாயல் மற்றும் ஷிஃபா ஹெல்ட் அண்ட் வெல்பேர் அசோசியேசன் KMT மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுத்தும் காயல் மெடிக்கல் கார்டுக்கான (KMC) 2015-2016 பருவ வருட விண்ணப்பங்கள் இன்ஷா அல்லாஹ் மார்ச் 23 முதல் கீழ்க்காணும் இடங்களில் வினியோகிக்கப்படும்.
(1) மைக்ரோகாயல் அலுவலகம்,
மூன் பளாசா, எல்.கே.லெப்பைதம்பி சாலை,
காயல்பட்டணம்.
தொலைபேசி எண்: 04639 281381 / 9150177199
(மூன்று தினங்கள் மட்டுமே)
இந்த சேவையை கீழ்காணும் நபர்கள் மற்றும் பெற தகுதியானவர்கள்:
(1) மஸ்ஜித், மதரசாவில் பணிபுரிபவர்கள்
(2) இஸ்லாத்தில் திரும்பியவர்கள்
(3) விதவைகள்
(4) அனாதைகள்
(5) வீட்டில் உழைக்க சக்தி படைத்தவர்கள் இன்றி வாழ்பவர்கள்
மேலும் மேற்கூறப்பட்ட 5 வகையினரும் ஜகாத் வாங்க தகுதியானவர்களாகவும் இருக்க வேண்டும்.
இலவச மாஸ்டர் செக்-அப்:
மேலும் இன்ஷா அல்லாஹ் ரிதா பவுண்டெசனின் முழு உதவியில் சுமார் 50 பேருக்கு (இஸ்லாத்தில் புதிதாக வந்தவர்களுக்கு முன்னுரிமை) ருபாய் 800 மதிப்பிலான மாஸ்டெர் செக்-அப் இலவசமாகவும் ம்ற்றும் இன்னும் இந்த கார்ட் பெரும் 150 பேருக்கு வெரும் 200 ருபாயில் ரிதா பவுண்டெசனின் உதவியில் மாஸ்டெர் செக்-அப் எடுக்க்ப்பட உள்ளது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நிர்வாகி,
மைக்ரொகாயல்.காம்
[சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது @ 11:39 / 15.03.2015] |