காயல்பட்டினம் நகராட்சியால், நகரிலுள்ள கடைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 10 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தம் 2 ஆயிரத்து 700 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் தலைமையிலான குழுவினர், நகரிலுள்ள 54 கடைகளில் இம்மாதம் 11ஆம் நாள் புதன்கிழமையன்று திடீர் சோதனை நடத்தினர்.
நிறைவில், 13 கடைகளிலிருந்து, அளவு குறைவான ப்ளாஸ்டிக் பொருட்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் 10 கிலோ அளவில் கைப்பற்றி எடுத்துச் சென்றதோடு, ரூபாய் 2 ஆயிரத்து 700 அபராதமும் விதித்துச் சென்றனர்.
உணவகங்களில் சோதனையிட்ட அவர்கள், உணவு தயாரிக்கப்படும் முறை, தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை மூடி பராமரித்தல், உணவு தயாரிக்கும் இடம் - பரிமாறும் இடங்களைத் துப்புரவாக வைத்தல் உள்ளிட்டவை குறித்து தேவையான இடங்களில் அறிவுரைகளை வழங்கினர். பலசரக்குக் கடைகளில், பான்பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்திச் சென்றனர்.
இச்சோதனையில், காயல்பட்டினம் நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி மற்றும் பணியாளர்கள் இணைந்து பணியாற்றினர்.
நகராட்சியின் திடீர் சோதனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |