காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் அண்மைக் காலமாக வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலம் வந்துவிட்டால், தர்பூசணி விற்பனையும் துவங்கிவிடும்.
தைக்கா பஜாரில், ஐசிஐசிஐ வங்கி முனையில் தர்பூசணி விற்பனை படுஜோராக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பழத்தைத் துண்டுகளிட்டு ஒரு துண்டு 10 ரூபாய்க்கும், சாறு பிழிந்து ஒரு டம்ளர் சாறு 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. முழுப்பழம் கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பகல் நேரங்களில் பல வேலைகளை முடித்துவிட்டு இங்கு வரும் பொதுமக்கள் தம் தேவைக்கு துண்டுகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அல்லது சாறு அருந்திவிட்டு, வீட்டுத் தேவைக்காக முழுப்பழத்தையும் வாங்கிச் செல்கின்றனர்.
1. Re:... posted byummuhani kareem (kayalpatnam)[14 March 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 39608
வெயில் தளர்ச்சி தர்பூசணி என்று போட்டாலும் போட்டீர்கள்
தர்பூசணியை விட கூலாக மழை பெய்து தளர்ச்சி நீங்கி வெயிலும் தணிந்து விட்டது . இன்றைக்கு அவருக்கு தர்பூசணி வியாபாரம் நடந்தது மாதிரி தான்
2. Re:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[14 March 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39614
கண்ணாடிக்கூண்டில் கலர் கலராய் படுத்திருந்து நம்மை பிரியத்துடன் அழைக்கிறது அந்த கோடை வெயிலில் கடையோரமாக நின்று அதை பருகும் போது ஏற்படும் இதமான சுகம் இருக்கிறதே,அந்த சுகம் ஐந்து நட்சத்திர நாகரீக உணவகத்தில் கூட கிடைக்காது !
"கொதிப்பை தணிக்க குளிர்ச்சியை திணிக்க தர்பூஸ்" என்று தலைப்பிட்டிருந்தால் சற்று பொருத்தமாக இருந்திருக்குமல்லவா?அதிகப்பிரசங்கி ஆதம் கொஞ்சம் அடங்கிறியா?
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross