காயல்பட்டினத்தில் கட்டிட காண்டிராக்டர் வங்கியில் இருந்து எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் பெட்டியில் வைத்திருந்த பணம் ரூபாய் 2.80 லட்சம் மாயமானது குறித்து ஆறுமுகனேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை சார்பில் கூறப்படுவதாவது:
காயல்பட்டினம் கோமான்புதூரைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் ஜெயராமலிங்கம் (55). காயல்பட்டினத்தில் கட்டிட காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார்.
திங்கட்கிழமை மதியம் இங்குள்ள ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து தனது பெயரில் உள்ள கணக்கில் ரூ.1.30 லட்சமும், தனது மகன் தங்கலிங்கம் பெயரில் உள்ள கணக்கில் இருந்து ரூ.1.50 லட்சமும் எடுத்துள்ளார்.
இதனை ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி அருகே நடைபெறும் கட்டிடப் பணியைப் பார்வையிடுவதற்காக சென்றார்.கட்டிட பணி நடைபெறும் இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்று கட்டிட பணி நடப்பது குறித்து பார்வையிட்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ஜெயலாமலிங்கம் தனது மோட்டார் சைக்கிளில் பெட்டி உடைக்கப்பட்டு திறந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெட்டியில் வைத்திருந்த ரூ.2.80 லட்சமும் மாயமானது.
இதுகுறித்து ஜெயராமலிங்கம் ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
வங்கியில் பணம் எடுத்துவிட்டு வரும் போது 3 மர்ம நபர்கள் தனது பைக்கை பின் தொடர்ந்து வந்ததாகவும், வங்கியில் பணம் எடுத்தது தெரிந்து தன்னை பின்தொடர்ந்து வந்து பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகனேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிர மணியன் விசாரணை நடத்தி வருகிறார்.
2. Re:...இந்த சம்பவம் நம்மில் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணி ... posted byசட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா)[16 March 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 39640
குற்றவாளிகள் கட்டாயம் கண்டுப்பிடித்து விடுவார்கள்
நம் தமிழக காவல்துறையை சார்ந்த அதிகாரிகள்.
நிச்சயம் சரியான குற்றவாளிகளை தண்டிப்பதோடு
இவர்களை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும்.
வங்கியில் பணம் எடுப்பதை கவனித்து மூன்று நபர்கள் அவரை பின்தொடர்ந்தார்கள் என்பதை நாம் அறியும் பொழுது நாமும்
இது விசயத்தில் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும்
இனி வருங்காலங்களில் இருப்பது அவசியம்.
நமதூரை பொறுத்தவரையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும்
வங்கியில் வரவு செலவு தொடர்பு அதிகம் வைத்துள்ளார்கள்.
இந்த சம்பவம் நம்மில் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணி
என்பதை கவனத்தில் கொள்ளவும்.அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்.
4. கவனக்குறைவே காரணம். posted byM.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.)[17 March 2015] IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 39645
வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த போது தன்னை மூன்று பேர் பிந்தொடர்ந்து வருவதை அறிந்தும் அஜாக்கிரதையாக இவ்வளவு பெரிய தொகையை வாகனத்தின் பெட்டியில் வைத்து விட்டுச் சென்றது கவனக்குறைவு. கட்டட வேலையை பார்க்கச் செல்லும் போது கயோடு பணத்தை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.
ஒரு முறை எனது ந்ண்பர் ஒருவர் என்னை சந்திக்க எனது தாயர் வீட்டிற்கு வந்திருந்தார். தாம் வாங்கி வந்த நுங்குப் பையை தனது பைக்கிலேயே வைத்து விட்டு உள்ளே வந்தார். சந்தித்துவிட்டு திரும்புகையில் நுங்கு பையோடு மாயம். பதைத்தார், துடித்தார். அதுபோல என் வீட்டிற்கு வெளியே நான் நிறுத்தி வைக்கும் எனது பைக்கின் டேங்க் கவர் ஜிப் அடிக்கடி திறந்து இருக்கும். யாரோ ஒருவர் அதை துளாவி வருவதை உணர்ந்தேன். இதுவே வாடிக்கையாக இருக்க ஒரு முறை ஒரு பேப்பரில் கொஞ்சம் ஆட்டுப்புழுக்கை, மாட்டுச்சாணம், ஆகியவற்றை நேர்த்தியாக பொதிந்து டேங்க் கவருக்குள் வைத்து ஜிப்பை மூடி விட்டு வந்தேன்.
சில மணித்துளிகள் கழித்து வந்து பார்க்கையில் மீண்டும் வழக்கம் போல ஜிப் திறந்தே இருந்தது. சரி பார்சல் சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்து விட்டது என மனதுக்குள் நகைத்துக் கொண்டேன். அதன் பின்னர் இதுநாள் வரை ஜிப் திறந்து கிடக்கும் பிரச்சனையே இல்லை! எடுத்தவன் ரெம்ப நொந்து இருப்பான். திருட்டுப் பயல்...!
5. CCTV அவசியம் தேவை...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.)[17 March 2015] IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 39646
காலத்தின் கட்டாயம் இது! உள்ளூரில் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக விரோதிகளின் தீமையைத் தடுக்கவும், காவல்துறையின் ஆலோசனைப்படி நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக பேருந்து நிலையம், கடற்கரை, வங்கிகள் மற்றும் தானியங்கி வங்கி போன்ற இடங்களில் CCTV நிறுவப்பட வேண்டும். நமதூர் பெண்கள் வங்கி சேவைகளை அதிகம் பயன்படுத்துவோர்களாக இருக்கின்றனர். வெளிநாட்டி இருந்து தனது இரத்தத்தை வேர்வையாக்கி உண்மையாக உழைத்து ஊருக்கு அனுப்பும் பணத்தை வீட்டுத்தேவைக்காக அவ்வப்போது நமது பெண்கள்தான் அடிக்கடி வங்கியிலிருந்து எடுத்து வருகின்றனர்.
காலத்தின் கடாயம் கருதி காலதாமதம் இன்றி உடனே CCTV நகரின் அனைத்து முக்கிய இடங்களிலும் நிறுவப்பட வேண்டும். இல்லையேல் கொலை, கொள்ளை நடத்தும் சமூக விரோதிகளின் அட்டூழியம் இன்னும் அதிகரிக்கும்.
6. Re:... posted bynizam (india)[17 March 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 39647
இதை நஹைப்புக்கு உரிய செயல் என கூற முடியாது. பாதிக்க பட்ட மாற்றுமத சகோதருக்கு நல்ல தீர்வை கொடுக்க வல்ல ரஹ்மான் போதுமானவன். மனந்திறந்து சொல்ல போனால் பலர் ஐபோன் பணம் இதுவரை இருசக்கர வாகனத்தில்தான் வைத்து புழங்குகிறார்கள். ஏனென்றால் அது அவ்வளவு உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன கை அடக்க அறுப்பு கருவிகொண்டுதான் இதை உடைக்க முடியும். பலர் இந்த பெட்டியில்தான் இதுவரை புழங்குகிறார்கள். இனி இதற்க்கு என்னுல்பட எல்லோரும் முற்றுபுள்ளி வைத்துவிடுவார்கள். மனிதன் நவீனத்தை அழிவுக்கு பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறான் ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டது ஆக்கத்துக்ககத்தான் என்பதை மறந்து விட்டான்.
இந்த சம்பவம் ஒரு தனிமனித சம்பவமாக எடுக்க முடியாது. இந்த சம்பவம் நமதூர் வங்கியில் உள்ள குறைபாடுகளை ஒரு அமைப்பு சுட்டிக்காட்டியது நிதர்சனம் என்பதை உணர்த்துகிறது.
இந்த வங்கிகளை நல அமைப்புகள் வலியுறுத்த உடனே கவனம் செலுத்தவேண்டிய விசயங்கள் ஒன்று நாம் சிறுபிள்ளை ஆக இருக்கும்போது ஒருவர் துப்பாக்கி ஏந்தி நமதூர் சென்ட்ரல் வங்கியில் நிற்பாரே அந்த பாதுகாவலர் நியமனம் செய்ய வேண்டும்.
குறைந்த வருமானம் வங்கிகளுக்கு வந்த அந்த காலத்திலேயே கட்டுபடியான போது இபோது நமதூர் வங்கிகளுக்கு நல்ல வருமானம் இந்த காலத்தில் ஏன் சாத்தியமில்லை. இரண்டாவது அலுவக சிப்பந்தி சம்பந்த மில்லாத நபர் நடமாடுகிறார என்பதில் கண்காணிக்க வேண்டும். மூன்றாவது பணம் எடுப்பது பிறருக்கு தெரியாவண்ணம் அதை ஒரு மூடிய அறையாக கட்ட வேண்டும்.
சில காலத்து முன்பு மும்பை காவல்துறை பொதுமக்களுக்கு கொடுத்த சில எச்சரிக்கை கலை நினைவு படுத்த விரும்புகிறேன். ஒரே பாதையில் செல்லாமல் அடிகடி போகும் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும். செல்போனில் பேசும் போது பக்கத்தில் நபர்கள் இருந்தால் கொஞ்சம் தள்ளிபோய் மெதுவான குரலில் பேசவேண்டும் நடையை சோர்ந்ததுபோல் இல்லாமல் ஜாக்கிரதை உள்ளவன் போல் நடப்பது. யாரவது பின்தொடர்ந்தால் காவல்துறையை அழைக்க வேண்டும் அல்லது பாசாங்கு செய்ய வேண்டும்.
7. இனி இது போன்ற திருட்டுகளை / சமூக விரோத செயல்களை தடுக்க CCTV அவசியம் posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[17 March 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39649
இந்த மாதிரி திருட்டுகள் - சமூக விரோத செயல்பாடுகளை களைவதற்கு நகரில் பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையம் / வங்கி அலுவலகம் வெளி புற இடங்களில் CCTV கேமரா அவசியாமாகிறது - மேலும் CCTV கேமரா காயல்பட்டினத்தில் பொது இடங்களில் பொறுத்த வேண்டி நமது நகராட்சியில் பரிந்துரை செய்த காவல்துறையின் பரிந்துரையை தீர்மானமாக கொண்டு வர நகர்மன்ற தலைவர் அவர்கள் முயற்சி எடுத்து அத்தீர்மானம் நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்களால் கிடைப்பில் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது - இனி இது போன்ற திருட்டுகளை / சமூக விரோத செயல்களை தடுக்க பொது மக்களாகிய நாம் அனைவர்களும் இது விசியத்தில் கவனம் செலுத்தினால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மட்டுமே நகரில் பொது இடங்களில் CCTV கேமரா பொருத்தப்படும் - நகர்மன்றத்தை எதிர்பார்த்து பயனில்லை..!
8. உஷாராக இருக்கவேண்டிய கால கட்டம்! posted byமுஹம்மது ஆதம் சுதான்! (yanbu)[17 March 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39650
ஊர் விரிவடைந்து விட்டது.பண புழக்கங்களும் விரிவடைந்து கொண்டே போகிறது.அல்ஹம்திலில்லாஹ்! சகோதரர் சட்னி மீரான்,சகோதரர் முஹம்மது ரபீக் அவர்கள் கூறுவது சாதாரண வார்த்தைகள் அல்ல.மிக,மிக முக்கியமாக் கவனிக்கப்பட வேண்டிய விசியமாகும்.
மனைவி,மக்கள்,உற்றார் உரிவினர்,நண்பர்கள் அனைவர்களையும் பிரிந்து வெளிநாட்டில் வாழும் குறிப்பாக வளைகுடா நாட்டில் வாழும் காயலர்கள் மண்டைபிளக்கும் பாலைவன வெயிலிலும்,உதிரத்தை உறையச்செய்யும் கொடூரக்குளிரிலும் தங்கள் வேர்வையை இரத்தமாகப் பிளிந்து கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வங்கி மூலம் அனுப்புகிறார்கள்.அதை வங்கியிலிருந்து பெறவரும் நம் பெண்டிலர்கள் எவ்வளவு பாதுகாப்பாக பெற்று வருகிறார்கள் என்கின்ற லட்சணம் நாம் அனைவர்களும் அறிந்ததே. . வங்கயில் தெரிந்த ஒரு நபர் தென்பட்டாலே போதும் அவர்களிடம் அலவலாவுவதே அவர்களின் தலையாய கடமையாகும் (இந்த உரையாடலுக்கு வேறுசில பெயர்களும் உண்டு அதை எழுத விரும்பவில்லை) தங்களின் இந்த
பேச்சு சுகத்தில் மூழ்கியிருக்கும் அவர்களுக்கு தங்களிடமுள்ள பெரிய தொகையை எப்படி பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற பொறுப்புணர்ச்சி பெரும்பாலான பெண்களுக்கு கிடையாது.எங்கள் வீட்டு பெண்களும் இதற்க்கு விதி விலக்கல்ல
ஆகவே,அவர்களை பெண்திருடர்கள் பின்தொடர மாட்டார்கள் என்பது என்ன நிச்சியம்.நம் பெண்கள் முடுக்கைத்தான் பயன் படுத்துகிறார்கள் அந்த முடிக்கில் பணத்த பறிக்க என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமல்லவா? பெருந்தொகை பணத்தையோ, பெருமதிப்புள்ள நகை போன்ற பொருகளை கூட கொஞ்சம் அசந்தால் சொந்தக்காரனே அபேஸ் பண்ணுகின்ற ஒரு கேவலம்மிகு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
நமதூரில் நடந்துவிட்ட இந்த பகல் கொள்ளை சம்பவத்திற்கு மிகவும் மனவேதை அடைகிறேன்.அவர் எப்படியெல்லாம் வேர்வையை சிந்தி சம்பாதித்ததோ.கடவுள் அவரை கை விட மாட்டார்.
அன்பு காயல் நெஞ்சங்களே,இது நமக்கு ஒரு பாடம்.மிக மிக அவசியமாகவும் அவசரமாகவும் சிந்தித்து தெளிவான பாதுகாப்பு நடவடவடிக்கையை ஊர் நலன் நாடி உடனே எடுக்க்வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.என்னடா அரபுநாட்டில் இருந்துகொண்டு "ஆர்டர்" போடுகிறானே
என்று தயவுசெய்து எண்ணவேண்டாம்.அனைத்து காயல் சகோதரர்களும் எங்கள் உடன்பிறவா அண்ணன் தம்பிகள் என்ற உரிமையில்தான் பெரும்பாலான குடுமங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இங்கு நிம்மதி பெருமூச்சுடன் வாழ்கிறோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
9. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[17 March 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39654
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் யாவர்களின் மனதில் வருத்தத்தை தந்த செய்தி தான் இது .....நமது மரியாதைக்குரிய காவல் துறை அதிகாரிகள் மிகவும் துரிதமாகவே இந்த விசயத்தில் கவனம் செலுத்தி ...களவானியை '' பிடித்தால் தான் ...மேலைக்கு இது போன்ற ஒரு மட்டமான செயல் நமது ஊரில் நடக்காது .......
நமது ஊர் பெண்மணிகளுக்கு பாதுகாப்பு அவசியமே .......பண புழக்கம் நம் பெண்மணிகளிடம் தான் அதிகம் உள்ளது என்பது குறிப்பட தக்கது .......
வர, வர , நமது ஊரில் ரொம்பவும் மோசமான செயல்கள் நடப்பது சரி அல்லவே ....இதற்க்கு ஒரு வடிகால் அமைத்தால் தான் நல்லது .....
இதற்க்கு தான் நம் மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்கள் ....CC...கேமரா...அவசியம் ஏற்று வலியுறுத்தி வருகிறார்கள் ....இப்பவாது நம் ஊரின் முக்கியமான அனைத்து பகுதிகளிலும் இந்த CC கேமரா அவசியம் ...& மிகவும் துரிதமாக நகர் மன்றம் செயல் பட்டு அமைத்தால் இன்னும் நல்லதே .....
பொது மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்ப்பார்கள் ......
வஸ்ஸலாம்
10. விரைவில் குற்றவாளிகள் பிடிபட வேண்டும். posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[18 March 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39657
பணத்தை இழந்த நபருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காவல்துறையினர் உரிய துரித நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோமாக.
இந்த சம்பவம் நடந்தது, ஊரின் ஒரு பகுதியில். இதை தடுக்க வேண்டும் என்றால், பலரின் கருத்தை பார்த்தால் பெருநகரங்களில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இருப்பது போல், நமதூர் தெருவுக்கு தெரு, முடுக்குக்கு முடுக்கு CCTV வைத்தால், குற்றங்கள் நிகழாமல் தடுக்கலாம். அல்லது, குற்றவாளிகளை கண்டுபிடிக்கலாம்.
"CCTV கேமரா காயல்பட்டினத்தில் பொது இடங்களில் பொறுத்த வேண்டி நமது நகராட்சியில் பரிந்துரை செய்த காவல்துறையின் பரிந்துரையை தீர்மானமாக கொண்டு வர நகர்மன்ற தலைவர் அவர்கள் முயற்சி எடுத்து அத்தீர்மானம் நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்களால் கிடைப்பில் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது" (C&P)
ஒரு கருத்தை எத்தனை தடவைதான் ஒரு சார்பாக பரப்புவீர்கள்? இந்த தீர்மானம் பற்றிய விவாதங்கள் வீடியோ காட்சிகளாக இணையதளங்களில் உள்ளது.
நவம்பர் மாத கூட்டத்தில், உறுப்பினர்களின் எதிர்ப்பான (பொது மக்கள் கூடும் இடங்களில்) CCTV வைக்காவிட்டால் பராவில்லை. "நகராட்சியில் வைப்போம்" என்று தலைவி சொல்கிறார். உறுப்பினர்கள் அதற்கு உடன்பட்டு நகராட்சியில் வைக்க தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றுகின்றனர். அதற்கான வீடியோ இணையதளங்களில் இருக்கிறது.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இன்றைய தேதி வரை தலைவியின் விசுவாசியாக இருக்கும் 13-ம் வார்டு உறுப்பினர் நண்பன் சம்சுதீன் அவர்களும் அந்த தீர்மானத்தை ஆதரித்து ஒட்டு போடவில்லை. அதை விட சுவராஸ்யம், இன்று உறுப்பினர்கள் மீது பழியை போடும் தலைவி, தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக மினிட் புத்தகத்தில் "தலைவர் குறிப்பை" கூட எழுதவில்லை.
தீர்மானம் வரும் போது ஆதரித்து வாக்களிக்காமல், தனது "தலைவர் குறிப்பை" எழுதாமல், உறுப்பினர்களை குறை சொல்வது எங்ஙனம் நியாயம்? என்று வாசகர்கள் முடிவுக்கு விடுவோம்.
குற்றங்கள் நடைபெறும் பொது இடங்களை இப்போது காவல்துறையினர் சொல்லியுள்ளனர். அதை அமுல்படுத்த முயற்சியை எடுக்க தலைவி தீர்மானம் கொண்டு வருவார். அதன் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது நகரமன்ற கூட்டம் நடந்தால்(?) தெரியும்.
CCTV வைப்பதற்கு யாரும் எதிர்ப்பில்லை. எங்கெல்லாம் வைக்க வேண்டும் என்பதில் தான் கருத்து வேறுபாடு. அந்த வேறுபாடும் நீங்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross