சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் 49ஆவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்ற 49ஆவது பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 06ஆம் நாள் வெள்ளிகிழமையன்று மஃரிப் தொழுகைக்கு பின் ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hallஇல் பாளையம் முஹம்மத் சுலைமான் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்விட நுழைவாயிலில் வருகைப் பதிவு, நிலுவைச் சந்தா சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
ஹாஃபிழ் பீ.எஸ்.ஜெ.ஜெய்னுல் ஆப்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மன்றச் செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்ராஹீமின் மகன் ஹாஃபிழ் மாணவர் அபூதல்ஹா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் நயீமுல்லாஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மன்ற உறுப்பினர் ‘இன்னிசைத் தென்றல்’ அய்யம்பேட்டை பக்கீர் முஹ்யித்தீன் இனிய பாடல் ஒன்றைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்கு தாவூத் இத்ரீஸ் தலைமையுரையாற்றினார்.
மன்றச் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், உதவி கோரி மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு உரிய காலத்தில் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு, மன்றச் செயல்பாடுகள் இன்னும் மெருகேறி அமைந்திட, இதுவரை மன்றத்தில் உறுப்பினராகாதோர், கொள்கை மாச்சரியங்களை மறந்து, நகர்நலனை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு மன்றத்தில் இணைந்து செயல்பட முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஒற்றுமையின் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்திப் பேசினார்.
2014ஆம் ஆண்டின் மன்ற செயல்பாடுகள்:
2014இல் நகர்நலனுக்காக மன்றம் ஆற்றிய பணிகளை செயலாளர் ஸூஃபி இப்ராஹீம் விரிவாக விளக்கிப் பேசினார்.
தொகுப்புரை:
மன்ற ஆலோசகர் ஹைதர் அலீ தொகுப்புரையாற்றினார். தர்மத்தின் முக்கியத்துவம் குறித்து குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி அழகிய முறையில் மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
மன்றத்தின் வரலாறு மற்றும் செயல்பாடுகள் குறித்து, மன்ற ஆலோசகர் எம்.இ.எல்.செய்யித் அஹ்மத் நுஸ்கீ விரிவாக எடுத்துரைத்தார். ஜன்சேவா (வட்டியில்லா கடனுதவி அமைப்பு) நமதூரில் துவக்கப்பட்டுள்ளது குறித்தும், அதன் நன்மைகளை விளக்கியும் பேசிய அவர், அனைவரும் அதில் இணைந்து செயலாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
மன்றச் செயல்பாடுகளில் உறுப்பினர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து, மன்ற ஆலோசகர் கூஸ் எஸ்.ஏ.டீ.முஹம்மத் அபூபக்கர் விளக்கிப் பேசினார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
மன்றத்தில் புதியதாக உறுப்பினராக இணைந்துள்ள காயலர்கள் மற்றும் காயலர் அல்லாதோர் அனைவரும் இக்கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம்:
மன்றத்தின் பழைய உறுப்பினர்களான லால்பேட்டை நாஸர், ஷேக் அப்துல் காதிர், ஆதம் அபுல் ஹஸன் ஆகியோர் தமது கருத்துக்களையும், மன்றத்திற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி உரையாற்றினர்.
நன்றியுரை:
மன்ற துணைச் செயலாளர் நோனா செய்யித் இஸ்மாஈல் நன்றி கூற, உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.எல்.செய்யித் முஹம்மதின் இறைப்பிரார்த்தனையோடு கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கலைந்து செல்லும் முன் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
காயல் களரிக் கறி விருந்துடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
நோனா செய்யித் இஸ்மாஈல்
(செய்தி தொடர்பாளர் - ரியாத் கா.ந.மன்றம்)
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (48ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |