கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தின் 15ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் தலைவர் பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பொதுக்குழுக் கூட்டம்:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், 22.02.2015 அன்று, பெங்களூரு லால்பாக் பூங்காவில் நடைபெற்றது.
16.30 மணியளவில் அனைவரும் நிகழ்விடம் வந்தடைந்தனர். 17.00 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. ஹாஃபிழ் மன்னர் பி.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான் கூட்ட நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் வி.டி.என்.மஹ்மூத் இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் தலைமையுரையாற்றினார். வரும் ஆண்டில் மன்றத்தால் செய்ய திட்டமிடப்பட்டுள்ள செயல்திட்டங்கள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.அவரது உரையைத் தொடர்ந்து, மன்றத்தின் ஆண்டறிக்கை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மன்றத்தால் திட்டமிடப்பட்டு, செயல்பாடு துவக்க நிலையிலுள்ள Mentor and Menti Programme குறித்து, துணைத்தலைவர் ‘ஹனீவெல்’ இப்றாஹீம் விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில் ‘கிஃப்டோ’ இஸ்மாஈல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சிறுபான்மை சமூகத்தினருக்கு கல்வித்துறையில் மத்திய - மாநில அரசுகள் வளமான வாய்ப்புகள் பலவற்றை வழங்கியிருந்தும், போதிய விழிப்புணர்வின்மையால் அந்த அரிய வாய்ப்புகளை ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகமும் - குறிப்பாக முஸ்லிம் சமூகம் நழுவ விட்டு வருவது தொடர்கதையாக உள்ளதாகவும், பெங்களூரு காயல் நல மன்றம் இது விஷயத்தில் முழுக் கவனம் செலுத்தி, காயல்பட்டினத்தின் மாணவ சமுதாயத்திற்கு இவ்வரிய வாய்ப்புகள் முழுமையாகக் கிடைத்திட ஆவன செய்துகொடுக்க வேண்டும் என்று அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
நகர்நலன் குறித்த - உறுப்பினர்களின் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - புதிய நிர்வாகிகள் தேர்வு:
மன்றத்திற்கு பின்வருமாறு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
ஆலோசனைக் குழு:
(1) ஹாஜி எம்.ஏ.அப்துர்ரஹீம்
(2) ஹாஜி எஸ்.டி.ஷேக்னா மஹ்ழரீ
(3) பி.எம்.டி.அப்துர்ரஹ்மான்
(4) சுல்தான்
தலைவர்:
ஹாஜி பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் (Zumi Solutions)
துணைத்தலைவர்கள்:
(1) ஜபரூத் மவ்லானா (ஹனீவெல்)
(2) டைமண்ட் அப்துர்ரஹ்மான்
(3) முஹம்மத் இப்றாஹீம் (ஹனீவெல்)
(4) ஷிஹாபுத்தீன்
செயலாளர்:
முஹம்மத் இப்றாஹீம் நவ்ஷாத்
துணைச் செயலாளர்கள்:
(1) ஹாஃபிழ் ஷேக் அப்துல்லாஹ் முஹாஜிர்
(2) குளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(3) ஷேக் சுலைமான் (ஜுனிபர்)
(4) வி.டி.என்.மஹ்மூத்
பொருளாளர்:
வாவு முஹம்மத்
துணைப் பொருளாளர்கள்:
(1) ஹாஃபிழ் மன்னர் பி.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான்
(2) குலாம்
ஒருங்கிணைப்பாளர்கள்:
(1) ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் கரீம் ஃபாயிஸ்
(2) ஹாஃபிழ் டூட்டி செய்யித் முஹம்மத்
(3) ஹாஃபிழ் கே.எம்.எஸ்.உமர்
(4) வாவு ஷாஹுல் ஹமீத்
ஷிஃபா பிரதிநிதி:
வி.டி.என்.மஹ்மூத்
துளிர் பிரதிநிதி:
ஜாஃபர் சுலைமான்
சென்னை மண்டல பிரதிநிதி:
கே.கே.எஸ்.ஸாலிஹ் (சென்னை)
சர்வதேச பிரதிநிதி:
எம்.என்.சுலைமான் (கத்தர்)
தீர்மானம் 2 - கூட்டம் நடத்த கால நிர்ணயம்:
மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தை மாதம் ஒரு முறையும், பொதுக்குழுக் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறையும் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - கழிப்பிடம் கட்ட உதவி:
காயல்பட்டினத்தில் அண்மையில் பெய்த மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காயல்பட்டினம் மழை வெள்ள நிவாரணக் குழு கட்டிடங்களைக் கட்டிக்கொடுக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 2 வீடுகளில் கழிப்பிடம் கட்டும் வகைக்காக ரூபாய் 30 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 – உறுப்பினருக்கு பாராட்டு:
நமதூர் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு, நமது பெங்களூரு காயல் நல மன்ற உறுப்பினர் ஷிஹாபுத்தீன் தயாரித்தளித்துள்ள இலச்சினை, பொன்விழா இலச்சினையாகத் தேர்வுபெற்றுள்ளது. இதற்காக, அவரை இக்கூட்டம் மனதாரப் பாராட்டி மகிழ்கிறது.
தீர்மானம் 5 - நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்தோருக்கு நன்றி:
மன்றத்தின் Mentor & Mentee Programme குறித்து காயல்பட்டினம் மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டுவதற்காக, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் 02.01.2015 அன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இறையருளால் குறைந்த கால அவகாசத்தில் நடத்தி முடிக்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு, தமது விடுமுறைக் காலத்தில் பெரும்பகுதியைத் தியாகம் செய்து, எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பளித்துப் பணியாற்றிய மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இனி வருங்காலங்களிலும் மன்றச் செயல்பாடுகளில் இது போன்ற ஒத்துழைப்பை மன்றம் உரிமையுடன் எதிர்பார்க்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கம்பல்பக்ஷ் ஷாஹுல் ஹமீத் நன்றி கூற, துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் ஆர்வமாகக் கலந்துகொண்டனர். கூட்ட நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் தேனீர் - சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் குறித்து, அதன் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் மன்னர் B.A.செய்யித் அப்துர்ரஹ்மான்
படங்கள்:
ஹாஃபிழ் V.D.N.மஹ்மூத்
உதுமான் ஃபைஸல்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
பெங்களூரு காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெங்களூரு காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 09:41 / 17.03.2015]
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 10:46 / 17.03.2015] |