காயல்பட்டினம் கடற்கரையில் மாலை நேரங்களில் கண்ணியம் பேணும் பொதுமக்களே பெரும்பாலும் வந்து செல்கின்றனர். ஆனால் ஆள் அரவமற்ற காலை - மதிய நேரங்களில் அது பெரும்பாலான சமூக விரோதிகளின் கூடாரமாகவே மாறிவிட்டது.
தடை செய்யப்பட்ட கஞ்சா, மதுபானங்களை கடற்கரையில் அமர்ந்தவாறு சர்வசாதாரணமாக உட்கொள்வதும், மங்கையருடன் உல்லாசம் காண்பதும் அவர்களின் வாடிக்கை.
இவ்வாறிருக்க, தற்போது கூடுதலாக ஒரு பழக்கமும் அவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்துகொண்டு மதுபானங்களைக் குடித்து முடித்ததும் அவ்விடத்திலேயே மதுப்புட்டியைத் துண்டு துண்டாக உடைத்து சிதறடித்துச் செல்வதை கடந்த சில நாட்களாக அவதானிக்க முடிகிறது.
அவற்றைப் பலர் பார்த்து திட்டியவாறு கடந்து செல்வதும், சில சமூக ஆர்வலர்கள் தமது பொழுதுபோக்கை மறந்து அவற்றைத் தம் கைகளால் பொறுக்கியெடுத்து குப்பைத் தொட்டியில் போடுவதன் மூலம் பொதுமக்களுக்கு நன்மை செய்வதையும் காண முடிந்தது.
பொதுமக்கள் கடற்கரையைப் பயன்படுத்தாத இதுபோன்ற நேரங்களில் முறையான கண்காணிப்பு அன்றாடம் அவசியம் என்பதையே இது உணர்த்துகிறது. |