சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 24ஆம் ஆண்டு விழா, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், மழலை மாணவ-மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 24ஆம் ஆண்டு விழா, இம்மாதம் 08ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம் தலைமை தாங்கி, உலக மகளிர் நாளை முன்னிட்டு சிறப்புரையாற்றினார்.
பள்ளி ஆசிரியை டீ.ஏ.அமேஷா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி பள்ளியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்து விளக்கிப் பேசினார். பள்ளி ஆசிரியை நிஷா கோல்டரியா - ஆண்டறிக்கையை ஆங்கிலத்தில் சமர்ப்பித்தார்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவரும் - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், சாத்தான்குளம் மனோன்மனீயம் சுந்தரனார் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஆனந்தி ரமேஷ் கிருஷ்ணன், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் பேராசிரியை அமுதா, அதன் இணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
கடந்த கல்வியாண்டில் 10ஆம், 12ஆம் வகுப்புகளில் பள்ளியளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவியருக்கும், 100 சதவிகித வெற்றிக்கு வழிகோலிய ஆசிரியையருக்கும் இவ்விழாவில் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவியரின் கண்கவர் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆசிரியை ஜெயமாலா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியையர், மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் முந்தைய (23ஆம்) ஆண்டு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |