கல்வி, மருத்துவம் போன்ற விஷயங்களிலும், ஏழை எளிய மக்களுக்கு நகராட்சி உதவலாம் என்ற புதிய பாதையில் நம் நகராட்சி பயணம் செய்ய, அனைவரும் ஒன்றாக பணியாற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
மார்ச் 27 (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் 2:30 மணிக்கு - நகர்மன்றத்தின் சாதாரண கூட்டத்தை நடத்திட - அஜெண்டா தயாரிக்கும்படி, ஆணையர் அவர்களை - சில தினங்களுக்கு முன்பு கேட்டு கொண்டுள்ளேன்.
இறைவன் நாடினால் - இந்த கூட்டத்தில் - 2015-16ம் ஆண்டுக்கான நகராட்சி பட்ஜெட் செலவீனங்களை முடிவு செய்யலாம்.
அதில் -
/// சாலைகள் புனரனைப்பு
/// புதிய மழை நீர் வடிகால்கள்
/// புதிய தெரு விளக்குகள்
போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கலாம்.
அது தவிர -
/// நகராட்சிகள் சட்டம் அனுமதித்துள்ளப்படி நகரின் கல்வி மேம்பாட்டுக்கும்,
/// நகராட்சிகள் சட்டம் அனுமதித்துள்ளப்படி நகரின் உடல் நலன் (மருத்துவம்) மேம்பாட்டுக்கும்,
/// நகராட்சி / அரசு கட்டுப்பாட்டில் உள்ள மயான ஸ்தலங்களை புனரமைக்கவும்,
/// நகராட்சிகள் சட்டம் அனுமதித்துள்ளப்படி பசுமையான காயலை உருவாக்க மரங்கள் நடவும்
இது தவிர - நிதி ஆதாரம் அடிப்படையில், இன்னும் சில விஷயங்களுக்கும் நிதி ஒதுக்க, மன்றத்தின் அனுமதி கோரவுள்ளேன்.
சாலை, குடிநீர், குப்பைகள் அள்ள, தெரு விளக்குகள் என்ற பணிகளுக்கு மட்டும் தான் நகராட்சி அல்ல; சட்ட விதிகளின்படி - கல்வி, மருத்துவம் போன்ற விஷயங்களிலும், ஏழை எளிய மக்களுக்கு நகராட்சி உதவலாம் என்ற புதிய பாதையில் நம் நகராட்சி பயணம் செய்ய, அனைவரும் ஒன்றாக பணியாற்றவேண்டும் என நான் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|