விஸ்டம் பப்ளிக் பள்ளி குழந்தைகள் பங்கேற்ற கல்விச் சுற்றுலா, 10.01.2015 அன்று நடைபெற்றது. இதுகுறித்து பெறப்பட்டுள்ள தகவலறிக்கை:-
கல்வி கற்றல் , கற்ப்பித்தல் என்பது வகுப்பறைகளோடும் ,வலைதளங்களோடும் மட்டுப் படுத்தப்பட்டு , அவற்றினுள்ளே குழந்தைகள் அமுக்கப்பட்டு முடங்கிப் போய் விடாமல், பல் வேறு பட்ட இடங்களுக்கும் குழந்தைகளை அழைத்துச் சென்று, பயணங்களின் ஊடாகவும் கற்கும் ஆற்றலை மேம்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் கல்விச் சுற்றுலாவை வருடந்தோறும் பள்ளி நிர்வாகம் ஒழுங்கு செய்து வருகிறது .
அந்த வகையில் இந்த அவசர உலகில் நம்மைச் சுற்றி இருக்கின்ற இறைவனின் அத்தாட்சிகளாய் காட்சி தரும் நீர் நிலைகளை அதனோடு இணைந்திருக்கும் இயற்கை வனப்புகளை , ரம்மியமான சுற்றுச் சூழலலை கண்டு களிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் மூலம் கற்று மகிழ்ந்திடும் விதமாக விஸ்டம் பள்ளிக் குழந்தைகள் கூத்தன் குளம் பறவைகள் சரணாலயத்தை பார்வையிட்டு வந்தனர் .
இந்த சுற்றுலா மூலம் மாணவ மாணவியர் குறிப்பாக பறவைகள் வருடந் தோறும் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் நாட்டுக்கு நாடு இடம் பெயர்ந்து வாழும் முறையினை நேரில் கண்டு மகிழ்ந்ததோடு அவற்றை கேட்டறிந்து கற்றும் கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் அமைந்துள்ள விஞ்ஞான மத்திய நிலையத்தை பார்வயிட்டு நவீன தொழில்நுட்பங்களையும் , வானவியல் அற்புதங்களையும் கண்டும், கற்றும் மகிழ்ந்தனர்.
சுற்றுலாவில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியரும் பத்து ஆசிரியைகளும் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது .இந்தப் பயணம் கலந்து கொண்டவர்களை மிகுந்த உற்சாகத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் உள்ளாக்கியது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
S.I.புகாரீ
(அறங்காவலர் - விஸ்டம் பப்ளிக் பள்ளி)
விஸ்டம் பப்ளிக் பள்ளியின் முந்தைய கல்விச் சுற்றுலா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
விஸ்டம் பப்ளிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |