வரும் ரமழான் மாத முதல் வாரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
செயற்குழுக் கூட்டம்:
அபூதபீ காயல் நல மன்றத்தின் 29ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலையில், மன்ற செயற்குழு உறுப்பினர் மக்பூல் அஹ்மத் தலைமையில், பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் இல்லத்தில், மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ கிராஅத்துடன் துவங்கியது.
கருத்துப் பரிமாற்றம்:
தாயகம் காயல்பட்டினத்தின் பொதுவான பிரச்சினைகள், தேவைகள், குறைபாடுகள் குறித்து அலசி ஆராயப்பட்டு, நகர முன்னேற்றத்தில் மன்றத்தின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆலோசனை செய்யப்பட்டது.
மன்ற உறுப்பினர்கள் தமது சந்தா நிலுவைத் தொகைகளை விரைவாக வழங்கி, நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர ஒத்துழைக்க வேண்டுமென கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் 5ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை, வரும் ரமழான் மாத முதல் வாரத்தில் சிறப்புற நடத்திடவும், கூட்ட நாள் மற்றும் நிகழ்விடம் குறித்து தீர்மானிக்கப்பட்ட பின், தனி அழைப்புச் செய்தியாக வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த செயற்குழு:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டம், வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நடைபெறும் என மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அறிவித்து, துஆ இறைஞ்ச - ஸலவாத், கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
செய்தி மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர்
அபூதபீ காயல் நல மன்றம்
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய (28ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |