வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா, இம்மாதம் 21ஆம் நாள் சனிக்கிழமை (நாளை) காலை 10.00 மணியளவில், கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரியின் நிறுவனர் தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்க, தக்கலை நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ஆர்.பெருமாள்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவியருக்குப் பட்டச் சான்றிதழ்களை வழங்கி உரையாற்றவுள்ளார்.
2011-2014ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை பிரிவில் 257 மாணவியர், முதுகலை பிரிவில் 13 மாணவியர் என மொத்தம் 270 பேர் இவ்விழாவில் பட்டம் பெறவுள்ளனர்.
இவர்களுள், தமிழில் 3 மாணவியர், பகுதி I அரபி துறையில் 4 மாணவியர், வணிக நிர்வாகவியல் துறையில் 4 மாணவியர், வணிகவியல் துறையில் ஒரு மாணவி, கணிப்பொறியியல் துறையில் 4 மாணவியர், தகவல் தொழில்நுட்பத் துறையில் 7 மாணவியர், முதுகலை ஆங்கில இலக்கியத்தில் ஒரு மாணவி, முதுகலை வணிகவியல் துறையில் ஒரு மாணவி என ஆகியோர் - பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் (University Rank) இடம்பெற்றுள்ளனர்.
மாணவி ஜெ.எஸ்.சுபைதா மஃபாஸா பகுதி I அரபி துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுள்ளதையடுத்து, இவ்விழாவில் தங்கப்பதக்கம் பெறவுள்ளார். பல்வேறு துறைகளில் 23 மாணவியர் பல்கலைக்கழக தர வரிசையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |