தமிழகத்தில் பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசுப் பொதுத்தேர்வு இன்று காலையில் துவங்கியது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு நடைபெறுவதை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் பார்வையிட்டார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி உடன் சென்றார்.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகத்திலிருந்து பெறப்பட்ட தகவல் படி, அப்பள்ளி தேர்வு மையத்தில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 23, மாணவியர் 6 என மொத்தம் 29 பேர் தேர்வெழுதுகின்றனர்.
அதே தேர்வு மையத்தில், சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியிலிருந்து 33 மாணவியரும், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 79 மாணவர்களும், ஆறுமுகநேரி அன்னம்மாள் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 17 மாணவர்கள், 12 மாணவியர் என மொத்தம் 29 பேரும், வீரபாண்டியன்பட்டினம் ஜான் ப்ரிட்டோ மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 4 மாணவர்களும் என மொத்தம் 174 மாணவ-மாணவியர் இத்தேர்வு மையத்தில் தேர்வெழுதுகின்றனர்.
தேர்வுக்கு ஆயத்தமான முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ-மாணவியரை, பள்ளி நிர்வாகிகளான ஆர்.எஸ்.அப்துல் காதிர், முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி ஆகியோர் வாழ்த்திப் பிரார்த்தித்து, தேர்வறை நுழைவுச் சீட்டை தம் கைகளால் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
தகவல் உதவி & படங்களுள் உதவி:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |