காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபுக்குச் சொந்தமான கட்டிடங்கள் சில சித்தன் தெருவில் உள்ளன. இக்கட்டிடங்கள், மர்ஹூம் க.மு.க.செய்யித் அஹ்மத் ஆலிம் என்ற கானாப்பா அவர்களால் வக்ஃப் செய்யப்பட்டவையாகும். வீடு, நியாயவிலைக் கடை உள்ளிட்டவை வாடகை அடிப்படையில் அங்குள்ளன.
நியாய விலைக் கடை செயல்பட்டு வந்த கட்டிடம் - தோண்டப்படாமல் போடப்பட்ட சாலைகளால் பூமிக்குள் சிறிது சிறிதாக மறைந்து வருகிறது. நாட்பட்ட கட்டிடமாக இது இருப்பதால், சிறிய மழை பெய்தால் கூட இக்கட்டிடத்திற்குள் மழை நீர் ஒழுகி, அதனால் அங்கிருக்கும் உணவுப் பொருட்கள் வீணாய்ப் போகும் நிலையுள்ளது.
இந்நிலையில், நியாய விலைக் கடை அமைந்துள்ள பழுதடைந்த கட்டிடத்தை இடித்தகற்றும் பணி 02.02.2015 திங்கட்கிழமையன்று துவங்கி, சில நாட்கள் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 09ஆம் நாள் திங்கட்கிழமையன்று புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாம் நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ துஆ பிரார்த்தனை செய்து நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் முதல் அடிக்கல்லை நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.), என்.எஸ்.நூஹ் ஹமீத், கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, சாமு ஷிஹாபுத்தீன் உள்ளிட்டோரும், அப்பகுதியை உள்ளடக்கிய 06ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீனும் கலந்துகொண்டனர்.
தகவல்:
கம்பல்பக்ஷ் S.H.மொகுதூம் முஹம்மத்
படங்களில் உதவி:
S.I.அஹ்மத் முஸ்தஃபா
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |