காயல்பட்டினம் தேங்காய் பண்டகசாலையில் இயங்கி வரும் அல்அமீன் நர்ஸரி மற்றும் துவக்கப்பள்ளி, புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
பொதுமக்களுக்கோர் அறிவிப்பு!
எமது அல்அமீன் நர்ஸரி மற்றும் துவக்கப்பள்ளி, இறையருளால் கடந்த 21 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு, கல்விப்பணியாற்றி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். கடந்த பிப்ரவரி 15ஆம் நாள் முதல், புதிய நிர்வாகம் பள்ளியின் முழுப் பொறுப்பையும் ஏற்று நடத்தி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்அமீன் கல்வி அறக்கட்டளையின் சார்பில், ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ அவர்கள் பள்ளியின் செயலாளராகவும், ஹாஜி ஏ.எஸ்.முஹம்மத் அஷ்ரஃப் அலீ எம்.ஏ., பி.எட்., பள்ளியின் தலைவர் மற்றும் பொருளாளராகவும், ஆசிரியர் எம்.ஏ.புகாரீ எம்.காம்., எம்.எட்., எம்.ஃபில்., பள்ளியின் தாளாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
இப்பள்ளியின் கல்விப் பணி தொடர்ந்து நடைபெற பெற்றோர் தம் குழந்தைகளை எம் கல்வி நிறுவனத்தில் சேர்த்துப் பயனடையுமாறு அன்புடன் வேண்டுகிறோம். வரும் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை ப்ரீ கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை அறியத் தருகிறோம்.
மேலதிக விபரங்களுக்கு, +91 4639 283507, +91 98427 89817, +91 99946 36923 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
தகவல் & படம்:
வீனஸ் ஸ்டூடியோ
அல்அமீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |