தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக (SUPERINTENDENT OF POLICE), சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் முகுந்த் IPS இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அஸ்வின் கோட்னிஸ் IPS, மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்தவர். மே 26, 1976இல் பிறந்த இவர், 2003 ஆண்டு IPS இல் இணைந்தார்.
பயிற்சி காவல்துறை துணை கண்காணிப்பாளராக திருநெல்வேலியில் தனது சேவையை துவங்கிய இவர், பின்னர் தேவக்கோட்டை மற்றும் கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றியவர்.
ஆளுநருக்கு காப்பாளராக (ADC) இருந்துள்ள இவர், பின்னர் - நாகப்பட்டினம், கடலூர் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் எம்.துரை IPS, சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் திருநெல்வேலி சரக DIG ஆக இருந்த சுமீத் சரண் IPS, விழுப்புரம் சரக DIG ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் சரக DIG ஆக இருந்து டாக்டர் எஸ்.முருகன் IPS, திருநெல்வேலி சரக DIG ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை தொடர்ந்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
|