குடிநீர் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை நிலுவையின்றி செலுத்திய பின்னரே புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். அறிவிப்பு வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சிக்கு 2014-2015ஆம் ஆண்டிற்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகைக் கட்டணம், வருடாந்திர ஏலக் கட்டணம், உரிமக் கட்டணம் ஆகிய வரிகளைச் செலுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது.
தவறும் பட்சத்தில், குடிநீர் இணைப்பு எவ்வித முன்னறிவிப்புமின்றி துண்டிப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
தற்போது செயல்படவுள்ள இரண்டாம் பைப்லைன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் இணைக்கப்படவுள்ளது. சொத்து வரி, குடிநீர் கட்டணம் நிலுவையின்றி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பு வாசகம் அமைந்துள்ளது. ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோ வாகனத்தில் இவ்வறிவிப்பு நகரெங்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |