முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர்ரஹ்மான், கடந்த அக்டோபர் மாதம் -
காயல்பட்டினம் தென் பாக கிராமத்தில் உள்ள தனது சர்வே எண் 278 இடத்தின் 5.5 ஏக்கர் நிலத்தை, காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியிருந்தார்.
அதில் - 4 ஏக்கர் நிலம் குப்பைகள் கொட்டவும் (கம்போஸ்ட் யார்டு) மற்றும் 1.5 ஏக்கர் நிலம் பொது பாதைக்கு எனவும் வழங்கப்பட்டிருந்தது. இந்த
இடத்தில் - கம்போஸ்ட் யார்டு கொண்டு வரவும், பயோ காஸ் திட்டம் கொண்டு வரவும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவு
தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே - டிசம்பர் 8 (2014) அன்று காயல்பட்டினம் நகராட்சி, MUNICIPAL SOLID WASTES (MANAGEMENT &
HANDLING) RULES 2000 விதிமுறைகள்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், சர்வே எண் 278(1) இல் கம்போஸ்ட் யார்டு கொண்டு வர,
விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தது.
ஜனவரி 12, 2015 தேதிய கடிதம் மூலம் - அப்பகுதிக்கான புதிய CRZ வரைப்படம்படி, சர்வே எண் 278(1) நீர் தேங்கும் இடம் என்றும், அதனால் -
நகராட்சியின் விண்ணப்பம் குறித்து மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க இயலாது என்றும், விண்ணப்பம் (நகராட்சிக்கு) திருப்பி அனுப்பப்படுகிறது
என்றும், இதற்கான மாற்று இடத்தை பரிசீலனை செய்யும்படியும் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், தெரிவிக்கப்பட்டது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்ததை தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சி இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய கோரியதாக தெரிகிறது.
மறு பரிசீலனை செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருநெல்வேலியில் உள்ள DTCP அரசு அமைப்பின் - துணை இயக்குனரின் அலுவலகத்தின்
தகவல்படி, மனுவில் உள்ள இடம் (சர்வே எண் 278[1]) - CRZ வரைமுறைக்குள் வருவதால், விண்ணப்பத்தை நிராகரித்து - பிப்ரவரி 19 அன்று
திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்தும், நகராட்சி மீண்டும் விண்ணப்பம் செய்ததாக தெரிகிறது. தேவையான ஆவணங்களை இணைக்காததால், மீண்டும் அந்த
விண்ணப்பத்தை - மாசு கட்டுப்பாட்டு வாரியம் - திருப்பி அனுப்பியுள்ளதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
|