காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் 7ஆவது ஆண்டு கல்லூரி நாள் விழா மற்றும் 6ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா ஆகியன 28.02.2015 அன்று நடைபெற்றன.
துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, குலசேகரன்பட்டினம் ஹஸனிய்யா நடுநிலைப்பள்ளியின் உதவி ஆசிரியர் கே.மீரான் அலீ, காயல்பட்டினம் எல்.டீ.எஸ்.கோல்டு ஹவுஸ் அதிபர் எல்.டீ.ஸித்தீக், எல்.கே.துவக்கப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் எம்.ஏ.புகாரீ மேடையில் அங்கம் வகித்தோருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய கல்லூரி அறக்கட்டளை அறங்காவலர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையுரையாற்றினார்.
மாணவி பி.ஏ.ஃபாத்திமா ஆஃப்ரின் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவி எம்.ஏ.வஜீஹா யாஸ்மின் கிராஅத் ஓதினார். அறக்கட்டளை ஆலோசகர் எஸ்.எம்.பி. சமீனா யாஸ்மின் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் ஆர்.கோகிலா ஆண்டறிக்கை வாசித்தார்.
இவ்விழாவில், வீரபாண்டியன்பட்டினம் விஸ்டம் பப்ளிக் பள்ளியின் ஆசிரியை ஏ.ஆர்.பர்ஜானா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நாலுமாவடி காமராஜர் மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் இரா.இராஜபாண்டி, எல்.கே.மேனிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் அஹ்மத் ஏ.ஜெ.முஸ்தஃபா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
முன்னதாக கல்லூரி மூலம் நடத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கல்லூரி மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஃபேஷன் டிஸைன் பிரிவு மாணவி எம்.லெட்சுமி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியையரான சேகு ஃபாத்திமா, சுல்தான் பெனாஜிர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
சமுதாயக் கல்லூரி சார்பில் 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சமுதாயக் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |