காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) தனது 50ஆம் ஆண்டை எதிர்நோக்கியுள்ளது. பொன்விழா ஆண்டு என்பதால், நடப்பாண்டு போட்டிகள் அனைத்தையும் வரும் மே மாதத்தில் விமரிசையாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்பந்துக் கழகம் (TNFA), அனைத்திந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) ஆகியவற்றின் அனுமதியோடும், தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழகம் (TDFA) ஆதரவோடும் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இச்சுற்றுப்போட்டியில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மஹாராஷ்ட்டிரம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைசிறந்த அணிகள் பல கலந்துகொண்டு விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பொன்விழாவை முன்னிட்டு, ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் அரிய வரலாற்றுத் தகவல்களைத் தாங்கிய பொன்விழா நினைவு மலரை (Golden Jubilee Souvenir) வெளியிடவும் நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் பலவும் இடம்பெறச் செய்யப்படவுள்ளன.
வரலாற்றுப் பெட்டகமாக வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த பொன்விழா நினைவு மலருக்கு, விளம்பரங்களைத் தந்துதவுமாறு ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. விளம்பரங்களுக்கான கட்டண விபரம்:-
விண்ணப்பப் படிவம்:-
மேற்கண்ட விபரப்படி விளம்பரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகளை, usc1955@gmail.com மற்றும் azadtrophy@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பாக...
கலாமீ யாஸர்
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |