பன்னிரண்டாம் வகுப்பிற்கான அரசுப் பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகின்றன. இதில், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 736 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
2015ஆம் ஆண்டு மார்ச் மேல்நிலை அரசுப் பொதுத் தேர்வு 05.03.2015 முதல் 31.03.2015 முடிய நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி 1.15 மணிக்கு முடிவடைகிறது. தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 165 பள்ளிகளிலிருந்து 8732 மாணவர்களும், 11004 மாணவிகளும் மொத்தம 19736 பேர் இந்ததேர்வை எழுத உள்ளனர். இதில் 15 மாற்றுத் திறனாளிகள் ஆவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில் 24 மணி நேரமும் ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்புடன் வினாத்தாள் மந்தணக்கட்டுகள் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனையின் படி தேர்வை சிறப்பாக நடத்தி முடித்திட கோட்டாட்சியர்கள், முதன்மைக்கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோரைக் கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் தேர்வில் முறைகேடாக ஈடுபடும் மாணவர்களைக் கண்காணித்திட முதுகலை ஆசிரியர்கள் பறக்கும் படை உறுப்பினர்களாக 156 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுக்குரிய வினாத்தாள் கட்டுகளை மொத்தம் 17 வழித்தட அலுவலர்கள் மூலம் காவல்துறை பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் முதல்முறையாக மொழிப் பாடங்களுக்கு கோடு போட்ட விடைத்தாள்களும் மற்ற பாடங்களுக்கு கோடு போடாத விடைத்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தனித் தேர்வர்கள் 723 (442 ஆண்கள்மற்றும் 251 பெண்கள்) பேர்தேர்வெழுத புனிதசவேரியார் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி மற்றும் புனிததாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி , வ.உ.சிஅரசுமேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி, கம்மவார் மகளிர் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி ஆகிய தேர்வுமையங்களில ;ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |