Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:07:52 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15519
#KOTW15519
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 5, 2015
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3487 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விபரம் வருமாறு:-

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் - ஹிஜ்ரீ 1436ஆம் ஆண்டு வைபவங்களுக்கு புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 04ஆம் நாள் புதன்கிழமையன்று 20.30 மணிக்கு மஜ்லிஸ் ஹல்காவில், அதன் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது.

மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.செய்யித் ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, என்.டீ.ஷெய்கு மொகுதூம் வாசித்தார்.

மஜ்லிஸ் அங்கத்தினரும், அபிமானிகளுமான

(1) ஹாஜி கவிஞர் எஸ்.செய்யித் அஹ்மத்
(2) ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர்
(3) ஹாஜி எம்.எச்.முஹம்மத் ஸுலைமான்
(4) ஹாஜி குளம் செய்யித் ஹுஸைன்

(5) ஹாஜி ஏ.எச்.முஹம்மத் இஸ்மாஈல்
(6) ஹாஜி எம்.ஜெ.ஷெய்கு ஸிராஜுத்தீன்

ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் மஃபிரத் - பிழைபொறுப்பிற்காக துஆ இறைஞ்சப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்தாண்டின் வரவு - செலவு கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

நடப்பு 88ஆம் ஆண்டு மஜ்லிஸ் வைபவ
துவக்க நாள் 21.04.2015 செவ்வாய்க்கிழமை என்றும்,
துஆ நாள் (நிறைவு நாள்) 20.05.2015 புதன்கிழமை என்றும்,
நேர்ச்சை நாள் 21.05.2015 வியாழக்கிழமை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மஜ்லிஸ் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-

தலைவர்:
நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம்

துணைத் தலைவர்:
டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம்

மேலாளர் (மேனேஜர்):
ஹாஜி ஒய்.எஸ்.ஃபாரூக்

இணைச் செயலாளர்கள்:
(1) மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ
(2) ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப்
(3) எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா

துணைச் செயலாளர்:
ஹாஜி எஸ்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் ஸூஃபீ

வைபவ கமிட்டியினர்:
(1) ஹாஜி கே.எம்.செய்யித் அஹ்மத் (தலைவர்)
(2) ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத்
(3) ஹாஜி எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்

இவ்வாறாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவித்தல், திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனனப்) பிரிவு ஆகியவற்றைச் செய்து வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா - உலக முடிவு நாள் வரை மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்திலேயே இயங்கிடவும், தாய்ச்சபை மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப், சேய்ச்சபை மத்ரஸா ஹாமிதிய்யா நிறுவனங்களுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான எந்த நிறுவனமும் இங்கு இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், மஜ்லிஸ் வளாக மாடியில் மத்ரஸா ஹாமிதிய்யாவின் அலுவலகத்தைக் கட்ட அனுமதி வழங்கியும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இன்னும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த - மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் கடந்தாண்டிற்கான [ஹிஜ்ரீ 1435 - 87ஆம் ஆண்டிற்கான] புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 14:33 / 18.04.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. CONGRATS
posted by SALMAN FARIS (YANBU ) [05 March 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39473

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் புதிய நிர்வாகிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வாழ்த்துக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [05 March 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39476

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .

இந்த வருடத்தின் வைபவங்கள் எல்லாம் நனி சிறப்புடன் நடந்து முடிய வல்ல நாயன் அருள் புரிவானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by SHAIK SALAHUDEEN (DUBAI) [05 March 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39478

அல்ஹம்துலில்லாஹ்.புதிய நிர்வாகிஹளுக்கு வாழ்த்துக்கள் .உங்களின் சிறப்பான பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வனஹா.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாழ்க ! வளர்க !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [05 March 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 39488

அஸ்ஸலாமு அழைக்கும்

மாநபியின் மாமன்றம் புனித மஜ்ளிஷுள் புகாரிஸ் சரீப் சபையின் நடப்பு 88ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் சந்தோசம் ! அல்ஹம்துலில்லாஹ் !

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்தையும் , துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

நமது மஜ்ளிசின் நிகழ்சிகள் அனைத்தும் சீராகவும் , சிறப்பாகவும் நடைபெற வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக !

தாய் சபையாம் புனித மஜ்ளிஷுள் புகாரிஸ் சரீபும் , அதன் சேய் சபையாம் அல்மத்ரசதுள் ஹாமிதியாவும் கியாம பரிபந்தம் வரை இங்கேயே இயங்கும் . இவ்விரு சன்மார்க்கச் சபையின் " அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத் " கொள்கை கோட்பாடுகள் , கல்வி ,கலாட்சாரங்கள் , சன்மார்க்க "தாவா" பணிகள் கியாமத் வரை தொடர்ந்து , தொய்வின்றி நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக ! ஆமீன் !

இவ்விரு சபைக்கும் நேரடியாகவோ , மறைமுகமாகவோ இடைஞ்சல் செய்பவர்கள் , மொட்டை நோட்டீஸ் போடுபவர்கள், இதே முஹல்லாவை சேர்ந்தவர்கள் ஆனாலும் , எவ்விடத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்களும் , அவர்களின் எண்ணங்களும் , அவர்களின் முயற்சிகளும் தவிடுபிடியாகி தரைமட்டமாகி விடும் என்பது கடந்த கால வரலாறு !

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது சன்மார்க்க சபைகளின் மார்க்கச் சேவைகள் சிறப்பாக நடைபெறவும் , அதன் மூலம் உலக மக்கள் யாவர்களும் நற்பயன் பெறவும் , ஈருலக சகல நன்மைகளையும் பெற்றேக நல்லருள் புரிவானாக ! ஆமீன்!!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [05 March 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39489

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .

இந்த வருடத்தின் வைபவங்கள் எல்லாம் நனி சிறப்புடன் நடந்து முடிய வல்ல நாயன் அருள் புரிவானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved