Re:... posted byummuhani kareem (kayalpatnam)[10 March 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 39549
ஆபிதா ஷேக் அவர்களே! நீங்கள் இந்த நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி ! கண்டிப்பாக உங்களின் பதவிக்காலம் முடியும் முன்னால் இதற்கு முடிவு எடுத்தே ஆக வேண்டும்
பெண்களாகிய நாங்கள் எப்போதோ தான் வெளியூருக்கு செல்கிறோம் அடிக்கடி வெளியூர் செல்லும் ஆண்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது நாம் செல்லும் போது தான் தெரிகிறது
திருசெந்தூரோ அல்லது தூத்துக்குடி , திருநெல்வேலி போன்ற வெளியூர்களில் எல்லாம் நமதூர் மக்கள் கண்டகடரிடமோ டிரைவரிடமோ சென்று இது காயல்பட்டணம் போகுமா? போகுமா? என்று பிச்சை கேட்பது மாதிரி கேட்க வேண்டியுள்ளது அவர்களும் வெறுப்பான முகபாவத்துடன் போகாது என்று கத்துகிற சூழ்நிலையை பார்க்கிறோம் இது பல வருடங்களாக நடக்கிறது. இதற்கு முடிவு எடுத்தே ஆக வேண்டும்
இப்படி ஒரு நாள் ஆழ்வார்திருநகரியில் நிற்கும் போது 10 பஸ்களுக்கு மேல் திருச்செந்தூருக்கு சென்றது காயல்பட்டணம் செல்லாது என்று கூறி விட்டனர் நாம் ஏதோ கிராமத்தில் தான் இருக்கிறோமா என்று நினைக்க வேண்டியுள்ளது
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நமதூரில் டிரைவர் ஆக வேலை பார்க்கக்கூடிய ஒருவர் சொன்ன தகவல் இன்னும் 5 ஆண்டுகள் போனால் நமதூருக்கே வண்டி வராது அந்த மாதிரி நமதூர் சாலைகளை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி வண்டிகளையும் பைக்குகளையும் வழியில் நிப்பாட்டி வைத்துக்கொண்டு அந்த ஊரிலேயே வேலை செய்கிற நமக்கே சிரமமாக இருக்கிறது இதனால் தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்ற தகவலையும் கூறினார் ஆதலால் இதற்கும் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் அமைச்சரிடம் மனு கொடுத்து விட்டேன் என்று இருக்காமல் இதற்கு என்ன காரணம் என்ற விளக்கத்தையும் கேட்டு தீர்வு எடுக்க வேண்டும்.
மேலும் ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்ன மாதிரி முதியோர் தொகை விதவை தொகை மக்களுக்கு கிடைக்க செய்தல் காயல்பட்டணத்தில் அலங்கோலமாக இருக்கும் ரோடுகள சீரமைத்தல் இந்த மாதிரி நல்ல காரியங்களை செய்யும் போது மக்களின் மனதில் நீங்கா இடம் பெறுவீர்கள் இறைவனிடத்தில் நமக்கு நன்மையையும் கிடைக்கும்
எல்லா புகழும் இறைவனுக்கே!
வல்லான் அவனே துணை நமக்கே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross