ஒரு உண்மை விரைவில் வெளிவரத்தான் போகிறது! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[13 March 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39585
எனக்கு ஒரு உண்மையை தெரிஞ்சுக்க ஆசைபடுகிறேன்!
தலைவிக்கு வாகனம் வாங்குவதற்கு பத்து உறுப்பினர்கள் முதலில் ஆதரவு தெரிவித்து,அது தீர்மானமாக நிறைவேறிய பின்னர். நிதிநிலை விசியம் வரும்பொழுது,அந்த வாகனத்தை வாங்கவே வேண்டாம் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் மறுப்பதின் காரணமென்ன? நிதிநிலை தடையாக இல்லை என்பதை நிநிலை அறிக்கை கூறிய பின்னரும் பல மாதங்கள் கழித்து முதலில் சம்மதித்த மெம்பர்கள் பின்னர் மறுப்பதின் மர்ம பின்னணி என்ன?
தலைவி அவர்கள் ஒரு வாகனத்தை அரசுமூலம் பெறுவதில் என்ன பாதிப்பு நமதூருக்கோ அல்லது நம் மக்களுக்கோ ஏற்பட்டுவிடும் என்று பயபடுகிறீர்கள்.அந்த பயத்தையும்,பாதிப்பையும் நடுநிலை மக்களுக்குத்தெரிவித்தால் மக்களாகிய நாங்களும் உங்களுடன் சேர்ந்து எதிர்க்க தோதுவாக இருக்குமல்லவா?
தலைவி அவர்கள் மாநகராட்சிப்பொருளை தவறாகவோ அல்லது சொந்த தேவைக்காகவோ பயன்படுத்தி இருக்கிறார்களா? அல்லது இப்போது ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தில் ஒன்றை தன் சொந்த தேவைக்காக உபயோகித்து இருக்கிறார்களா? எந்த அடிப்படையில் அவர்களுக்கு வாகனம் வாங்க எதிர்க்கிறீர்கள்?
10- வது வார்டு உறுபினர் கூறுகிறார் தலைவியைப்பாத்து, நீங்கள் ஏதாவது ஊருக்காக செய்யுங்கள் பிறகு வாகனம் வாங்கலாம் என்ற உத்தம வார்த்தையை உதிர்த்திருக்கிறார். வாஸ்த்தவம்தான் தலைவி அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்களும் எதிர்பார்க்கிறோம். அந்த எதாவது செய்ய வேண்டுமென்றாலும் வாகன வசதி தெவைபடுகிறதல்லவா?
நீங்கள் ஏதாவது ஊருக்கு செய்துவிட்டு நகராட்சியிலிருந்து சம்பளம் பெறுங்கள் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.ஏன் அப்படி கேட்க மறுக்கிறார் அந்த உறுப்பினர்,அவர் நகராட்சியிலிருந்து வெளிநடப்பு செய்த காலத்திலெல்லாம் காலணா சம்பள காசைக்கூட கடாசிவிட்டு வந்த உத்தம வீரரல்லவா?
ஆக, இந்த விசியத்தில் பல உள்நோக்கமுடைய உண்மைகள் இருதரப்பிலும் புதைந்து ஒளிந்திருப்பதாகவே எண்ணுகிறேன். ஒவ்வொன்றாக ஒவ்வொரு பருவத்திலும் பதமையாக பூனைக்குட்டி பவனி வரத்தான் போகிறது, அதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross