உண்மைக்கு புறம்பான தகவல்கள் posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[13 March 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39593
தலைவிக்கு வாகனம் தேவையா இல்லையா? என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும். VMS மாமா முதல் இதற்கு முன் இருந்தவர்களுக்கு, தலைவர்களுக்கென்று தனி வாகனம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களும் தங்களது பணிகளை செவ்வனே செயதார்கள்.
இப்போதைய பிரச்சனை, தலைவி முறைப்படி செய்தார்களா? இல்லையா? உங்களது செய்தியில் கூட, மே 2012 நடந்த நகரமன்ற கூட்டத்தில், அப்போதைய 1-வது வார்டு உறுப்பினர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து மற்றும் எதிர்த்து பேசியவர்கள் என்ற தகவல் மட்டுமே உள்ளது. பிரச்சனை என்னவென்றால், தீர்மானத்துக்கு ஆதரவாக 4 பேர் மட்டுமே ஆதரித்தனர். மற்றவர்கள் வாகனம் வாங்க எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். தீர்மானம் தோற்றுவிட்டது.
ஆனால், தலைவி, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாற்றமாக, தீர்மானம் நிறைவேறிவிட்டதாக மினிட் புத்தகத்தில் எழுதினார். இது உண்மையா இல்லையா? என்று தலைவி & உறுப்பினர்கள் மட்டுமே சாட்சி. அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
"தலைவருக்கு எதிராக எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்றான - பெருவாரியான உறுப்பினர்களின் கருத்துக்கு எதிராக - நிறைவேறியதாக எழுதப்பட்ட தீர்மானங்களில் - இதுவும் ஒன்று.(C&P)
ஏற்கனவே எழுதிய (மாற்றி எழுதிய) தீர்மானத்தை திருத்தம் செய்ய சட்டத்தில் இடமில்லாததால், அந்த தீர்மானத்தை ரத்து செய்து, 9 மாதங்கள் கழித்து மீண்டும் இந்த பொருள், நகரமன்ற கூட்டத்தில் வருகிறது. இந்த காலகட்டத்தில், ஒரு உறுப்பினரை தவிர மற்ற அனைவரும் தலைவிக்கு எதிராக இருந்தனர். அதனால், தலைவிக்கு வாகனம் வாங்க தீர்மானம் தோற்கடிக்கபடுகிறது.
தீர்மானத்தின் நிலை இப்படியிருக்க, தலைவி சுமார் 2 வருடங்கள் கழித்து, உயர் அதிகாரிகளிடம், ரத்து செய்யப்பட 2-வது தீர்மானத்தை மறைத்து, இவர் மாற்றி எழுதிய முதல் தீர்மானத்தை காட்டி ஒப்புதல் கேட்கிறார். இது உண்மையா? என்று அவர் விளக்கட்டும்.
இப்படிக்கு உண்மைக்கு புறம்பாக தலைவி செயல்பட்டதால், முதல் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த உறுப்பினர்கள் ஜஹாங்கிர் மற்றும் ஜமால் ஆகியோர் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து வாகனம் வாங்க அனுமதி வழங்கப்படவில்லை என திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கும், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
அரசு தரப்பில் இனி என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross