நடிப்பு சகிக்கவில்லை! posted byHameed Rifai (jeddah ksa)[13 March 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 39596
5ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் அவர்களின் தன்னிலை விளக்கம் படிக்க சுவராசியமாக இருந்தது. நல்ல முயற்சி, ஆனால் எடுபடவில்லை. எனது கேள்விகள் சில...
1) நகராட்சிப் பணிகளைக் கருத்திற்கொண்டு நகர்மன்றத் தலைவருக்குத் தேவையான வாகனம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தது தலைவியல்லவே? 1ஆவது வார்டு உறுப்பினர் சகோதரர் ஏ.லுக்மான் அவர்கள்தானே?
2) 18 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியில் ஒரு தீர்மானம் நிறைவேற குறைந்தது 9 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த ஏ.லுக்மான் அவர்கள் ஆதரவு.
2வது வார்டு சகோதரி மம்செய்து ஃபாத்திமா எதிர்த்தாரா?
4வது வார்டு சகோதரி முத்து ஹாஜரா எதிர்த்தாரா?
5வது வார்டு நீங்கள் ஆதரித்தீர்கள்.
7வது வார்டு திரு அந்தோணி எதிர்த்தாரா?
9வது வார்டு சகோதரி ஹைரியா எதிர்த்தாரா?
13வது வார்டு சகோதரர் சம்சுதீன் ஆதரித்தார்.
14வது வார்டு சகோதரி பாக்கிய ஷீலா எதிர்த்தாரா?
15வது வார்டு சகோதரர் ஜமால் ஆதரவு.
18வது வார்டு சகோதரர் சாமி எதிர்த்தாரா?
அக்கூட்டத்தில் அத்தீர்மானத்தை எதிர்த்து பேசியவர்கள் இரண்டேயிரண்டு உறுப்பினர்கள்தானே?
என்னவோ வாக்கெடுப்பெல்லாம் நடந்து, 10 பேர் எதிர்த்து கையைத் தூக்கியது போல கதையளக்கப்படுகிறதே...? யார் யார் அந்தக் கூட்டத்தில் எதிர்த்தார்கள் என்று அல்லாஹ்வுக்கு அஞ்சி மனசாட்சியோடு சொல்ல முடியுமா?
3) சரி அதை விடுங்க! ஒரு நகர்மன்ற கூட்டம் நடக்கும்போது, அங்கு ஆணையர் மற்றும் அலுவலர்கள் இருப்பார்கள். நம் நகராட்சி கூட்டங்களில், ஊடகங்களும் தற்போது உள்ளன, பார்வையாளர்களும் வருகிறார்கள்.
உங்கள் கூற்றுப்படி - பெருவாரியான உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து, தலைவி மாற்றி மினிட் புத்தகத்தில் எழுதினார் என்றே வைத்துக்கொள்வோம். அந்த மினிட் புத்தகம் ஆணையரிடம்தானே இருபத்து நான்கு மணி நேரமும் இருக்கும்? அவர் சும்மா விடுவாரா? “என்ன மேடம், உறுப்பினர்கள் எதிர்க்கவல்லவா செய்தார்கள்? நீங்கள் ஆதரவு என்று எழுதி இருக்கிறீர்களே...?” என்று கேட்க மாட்டாரா?
4) அதையும் விடுங்கங்க. அந்த மினிட் புத்தகம், அதன் பிறகு - கணினி பிரிவுக்குப் போகிறது. அவர்கள் அதனைத் தட்டச்சு செய்து, சில நாட்களில் நகராட்சி இணையதளத்தில் ஏற்றுகிறார்கள். பிற இணையதளங்களும் அதனை வெளியிடுகின்றன. (நீங்களோ, உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, நகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் முன்னரே தட்டச்சு செய்யப்பட்ட தீர்மானங்களை வாங்கி வெளியிட்டீர்கள்.) “நாங்க எதிர்த்தோம், எதிர்த்தோம்”ன்னு இப்போ தொடர்ந்து பல்லவி பாடும் உறுப்பினர்களான நீங்கள் யாவரும் அப்போதெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தீர்களோ?
5) அதையும் விடுங்க! நகராட்சியில் ஒரு காரியம் நடக்க - குறைந்தது இரண்டு தீர்மானம் தேவை...
(1) அந்தப் பணிக்கான மன்ற ஒப்புதல்...
(2) அந்தப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அல்லது செலவினத்திற்கு ஒப்புதல்.
நீங்கள் உறுப்பினர் ஆகி மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இது உங்களுக்குத் தெரியாதா?
உங்களை ஏமாற்றி பணிக்கு ஒப்புதல் பெற்றுவிட்டு, ஒப்பந்தப் புள்ளிக்கோ, செலவினத்திற்கோ நகர்மன்ற கூட்டத்தில் அந்தப் பொருள் மீண்டும் வர வேண்டும் என்று நகர்மன்றத் தலைவருக்கு தெரியாதா? அப்போது, “இதற்கு நாங்கள் எங்கே ஆதரவு தெரிவித்தோம்?” என்று நீங்களெல்லாம் கேட்பீர்களே என்பது அவருக்குப் புரியாதா?
சொல்லும் பொய்யை சற்று பொருந்தச் சொல்லக் கூடாதா சகோதரர் ஜஹாங்கீர் அவர்களே...?
6) “சென்னையில் நகராட்சி நிர்வாகத் துறைக்கு புதிய ஆணையர் வந்தார், அவரிடம் ஜனவரி 2013 தீர்மானம் மறைக்கப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்டது” என கூறுகிறீர்கள். வாகனம் வாங்க பரிந்துரைத்தது தலைவி அல்ல, திருநெல்வேலி RDMA. வாகனம் வாங்க திருநெல்வேலி RDMA பரிந்துரைத்து கடிதம் எழுதியது ஆகஸ்ட் 2014. புதிய DMA/ஆணையர் பிரகாஷ் IAS வந்தது நவம்பர் 2014. இரண்டுக்கும் என்ன சம்மந்தம் என்று சொல்ல முடியுமா கதாசிரியர் அவர்களே?
7) அதை விடுங்கள். திருநெல்வேலி / சென்னை அதிகாரிகளுக்கு - ஜனவரி 2013 நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெரியாதா? நீங்கள் மார்ச் 2013இல் கொடுத்த நம்பிக்கை இல்லா கடிதத்தில்தான் அது குறித்து உள்ளதே? அது அப்படி இருக்க - தலைவி நினைத்தாலும் அந்த தீர்மானத்தை மறைக்க முடியுமா?
ஜனவரி 2013 தீர்மானம் எது குறித்து சகோதரரே? நிதி பற்றாக்குறை என பொய்யான காரணம் கூறிய தீர்மானம். ஏப்ரல் 2012 தீர்மானத்தை ரத்து செய்த தீர்மானமா அது? ஜனவரி 2013இல் அந்த தீர்மானம் வந்தபோது, ஏப்ரல் 2012 தீர்மானத்தை நாங்கள் ரத்து செய்கிறோம் என்று அப்போது கூறியிருக்க வேண்டியதுதானே? மறந்துட்டீங்களோ...?
மாதாமாதம் நகராட்சிக்கு 30 லட்சம் ரூபாய் அனுப்பும் சென்னையில் உள்ள அரசு அதிகாரிக்கு, காயல்பட்டினம் நகராட்சியின் நிதி நிலை தெரியாதா ஜஹாங்கீர் காக்கா...?
நாடகங்கள் முடிந்து வேஷங்கள் களையும் நேரம் இது. நடிப்பு சகிக்கவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross