அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[14 March 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39601
நடுநிலை தவறி, எப்போதும் ஒருதலைபட்சமாக எழுதுகின்றவர்கள் அந்த இணையதளம் வெளியிட்டுள்ள வாகனம் சம்பந்தமான செய்திக்கும் உறுப்பினர்களுக்கு எதிராகவே கருத்துக்களை பதிகின்றனர்.(c &p )
என்ற வாசகம் பொத்தாம் பொதுவாக ஒரு உறுப்பினர்
தன மறுப்பு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
இவ்விசியத்தில் கருத்து தெரிவித்தவனில் நானும் ஒருவன்.ஒருவேளை என்னை இலைமறை காயாக கோடிட்டிருந்தால் அது அவரின் அறியா புரிதலின் வெளிப்பாடே!.
நான் எந்த இடத்திலும் தலைவியை ஆதரித்தும்,உறுப்பினர்களை எதிர்த்தும் என் கருத்தைப்பதியவில்லை (மறுமுறையும் படித்தாலே புரியும்)
இந்த உறுப்பினரின் தன்னிலை விளக்கத்திற்கு பிறகு எனக்கு தோன்றும் சில நடுநிலைவாதிகளின் வினாக்கள் சிலவற்றை கேட்க விரும்புகிறேன்!
தலைவி அவர்கள் முதல் தீர்மானத்தை மாற்றி எழுதி விட்டார்கள் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு.
இந்த குற்றத்தை அந்த நகராட்சி நிர்வாகிகள் எவராலும் கண்டுபிடிக்காத அளவிற்கு ஒழித்து வைக்கப்பட்டிருந்த்தா?
இந்த தீர்மான நகல் வடிவம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வில்லையா? அந்த தீர்மான நகல் வடிவம் உண்மையாக எப்பொழுது கிடைத்து?
உடனேவா அல்லது இதே பொருள் விவாதிக்கப்படும் மற்றைய கூட்டத்திலா அதாவது சுமார் மூன்று வருடங்கள் கழித்துதான் தெரிய வந்ததா?
அப்படி தெரிய வந்த உடனேயே அனைத்து உறுப்பினர்களும் சென்றகூட்டத்தின் தீர்மானங்கள் மறைக்கப்பட்டு,உண்மைக்கு மாறாக மோசடியாக தலைவியால் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது என்கின்ற ஒரு தீர்மானத்தை ஒட்டுமொத்த உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டதா?
வாகனமே வாங்கக்கூடாது என்று அத்தனை உறுப்பினர்களும் திடமான தீர்வாக இருக்கும் வேளையில், அந்த வாகனம் வாங்குவதற்குறிய நிதிநிலைப்பற்றிய விவாதத்திற்கு அவசியமே இல்லையே. அந்த நிதி நிலை இருப்பு பற்றி ஏன் விவாதித்தீர்கள்?
( பொராட்டாவா சீ வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குபவன் உன் ஜேப்பில் எவ்வளவு காசு இருக்குது என்று கேட்க்கின்றவன் கதையைப்போல் இருக்குதல்லவா)
சரி உறுப்பினர் வாதப்படி எவராலும் கண்டுபிடிக்க இயலாதவகையில் தலைவியின் தனி அதிகாரத்தாலும், துஷ்பிரயோகத்தாலும் முதல் தீர்மானத்தை மாற்றி எழுதி விட்டார்கள் அதை ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வருபவர்களே, அதே தலைவி உங்களின் இரண்டாவது தீர்மானத்தையும் (நீங்கள் எல்லோரும் மறுபடியும் எதிர்த்த அதையும்) மினிட் புத்தகத்தில் மறுபடியும் மாற்றி எழுதி தனக்கு சாதகமான பயனை அடயமாட்டார்களா? அதை உங்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும் ?
இதையெல்லாம் விட மேலாக முதல் கூட்டம் நடந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோ பதிவு எங்கே? அதை போட்டுக்காட்டி மக்கள் முன் தலைவியின் முகத்திரையை கிழிக்கலாமே?
அல்லது அவர்கள் உண்மைக்கும் அல்லாஹ்விற்கும் மாற்றமாக மனசாட்சி இல்லாமல் மினிட் புத்தகத்தில் மாற்றி எமுதினார்கள் என்பதை இமியளவும் செந்தேகம் இல்லாமல் தீர்க்கமாக அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக நீங்கள் சொல்ல முன்வருவீர்களேயானால்,தலைவி அவர்கள் திருக்குரானை எடுத்து மேடையில் சத்தியம் செய்ய முன்வந்தார்களே அதேபோல் அவர்கள் பாணியில் அவர்களை சத்தியத்தை செய்ய சொல்லுங்களேன்,இது நீங்கள் கேட்க்கும் வழிமுறையல்ல அவர்கள் சொன்னதால் கேட்க சொல்கிறேன்.
ஆக,நான் மேலே பதிந்த்ருக்கும் கருத்துக்கள் அனைத்தும் நடுநிலையானவர்கள் விளக்கம் பெறநினைக்கும் வினாக்களே! உண்மை நிலையை அல்லாஹ் அறிவான் அவன் மீது பாரத்தை சுமத்துவதை விட்டுவிட்டு,நடுநிலை கருத்தாளர்களை கடித்து குதற்வதென்பது மனித இன மாண்புடைய செயல் அல்ல. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross