நடந்ததைச் சொல்வதில் எனக்குத் தயக்கமெதுவுமில்லை! posted byS,K.Salih (Kayalpatnam)[18 March 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 39664
செய்திக்குத் தொடர்பில்லையெனினும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதால், சூழல் கருதி அவை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வெளியான - அப்துர்ரஸ்ஸாக் லுக்மான் காக்கா அவர்களின் கருத்துக்கு (கருத்து எண்: 39658) எனது விளக்கம்:-
(1) நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் வாங்க அப்போதைய 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் அவர்கள் கோரும் அக்கூட்டப் பொருள் ஏப்ரல் (2012) மாத கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அதை ஆதரித்து சிலரும், எதிர்த்து சிலரும் பேசினர் என்பதை செய்தியில் நான் பதிவு செய்துள்ளேன்.
அக்கூட்டத்தில், உறுப்பினர் ஏ.லுக்மான் அவர்கள் உட்பட சிலர் கலந்துகொள்ளவில்லை என்பதே எனக்கு நினைவு.
(2) “பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்த்தும், தலைவி தீர்மானத்தைத் திருத்திவிட்டார்” என்ற உறுப்பினர்களின் தற்போதைய வாதத்தை என்னால் ஏற்க இயலவில்லை.
காரணம், 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேர்தல் முடிவுற்ற பின் மிக நெருக்கத்தில் நடைபெற்ற கூட்டம் அது. அப்போது தலைவர் - உறுப்பினர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் என குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை.
எனவே, ஒரு கூட்டப் பொருள் வாசிக்கப்படும்போது, அதை ஆதரித்தோ, எதிர்த்தோ உறுப்பினர்களால் பேசப்படும். பெரும்பான்மை உணர்வுகள் மதிக்கப்பட்டு, அதனடிப்படையில் தீர்மானம் இயற்றப்படும். (தனி வாக்கெடுப்பு நடத்தும் முறை அப்போது இல்லை.)
இது நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் வாங்கும் கூட்டப் பொருளுக்கு மட்டுமல்ல! தலைவர் - உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக விவாதத்திற்கு வரும் முன்பு வரை சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கூட்டங்களின் அனைத்து தீர்மானங்களுக்கும் இம்முறையே கடைப்பிடிக்கப்பட்டது.
(3) ஒரு கூட்டப் பொருளை ஆதரித்தோ, எதிர்த்தோ உறுப்பினர்களைக் கையை உயர்த்தச் சொல்லி, இன்னின்னார் ஆதரவு, எதிர்ப்பு என்று மினிட் புத்தகத்தில் பதிவு செய்யும் நடைமுறை - கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து பிற்காலத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் 18ஆவது வார்டு உறுப்பினர் திரு. இ.எம்.சாமி அவர்களால் முன்வைக்கப்பட்டதாகவே எனக்கு நினைவு. அதனடிப்படையிலேயே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
(4) வீடியோ பதிவு குறித்து குறிப்பிடும் சாளை அப்துர்ரஸ்ஸாக் லுக்மான் காக்கா அவர்கள், அக்காலகட்டத்தில் நானும், இன்னொரு இணையதள நிருபரும் படம் / வீடியோ எடுத்ததாகச் சொல்கிறார். அது உண்மையில்லை.
நானும், நண்பர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீயும் கூட்டங்களைப் படமெடுத்தோம் என்பது மட்டுமே உண்மை. வீடியோ எடுத்ததே - “தலைவி தீர்மானத்தைத் திருத்தி எழுதிவிட்டார்” என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பிறகுதான்.
(அவ்வாறு ஒரு கூட்டத்தில் நான் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது, 12ஆவது வார்டு உறுப்பினர் திரு. சுகு அண்ணன் அவர்கள் எனது கேமராவைப் பறிக்க முனைந்தது வரை வீடியோ காட்சியில் இடம்பெற்றிருக்கும்.
அந்த முயற்சியைத் தொடர்ந்தும் நான் வீடியோ பதிவு செய்ததைக் கண்ட - 18ஆவது வார்டு உறுப்பினர் திரு. இ.எம்.சாமி அவர்கள் எனது கேமராவுக்கு மிகவும் அருகில் முகத்தை வைத்துக்கொண்டு, “வீடியோ வேணாம்!” என பலமுறை சொன்னதும் அந்த வீடியோ பதிவில் அடக்கம்.
அதற்குப் பிறகுதான், காயல்பட்டணம்.காம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் படி இன்றளவும் வீடியோ பதிவு செய்து வருகிறது.)
“இத்தனை சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கிறதே...? இக்கருத்துக்களை முற்கூட்டியே சொல்வதற்கென்ன?” என்று கூட கேள்வியெழுப்பப்படலாம்.
இப்போதும் என் பெயர் இழுக்கப்பட்டிருக்காவிட்டால் நான் இக்கருத்தைப் பதிவு செய்யாமல் தவிர்த்தே இருப்பேன். என் கடமை செய்திகளை உள்ளது - உள்ளபடி வெளியிடுவது மட்டுமே! தேவையான நேரங்களில் கருத்துப்பதிவு செய்வதுமுண்டு. (பெரும்பாலும் இறப்புச் செய்திகளுக்கு இரங்கல் தெரிவிக்கவே நான் அதிகம் கருத்துப்பதிவு செய்திருப்பேன்.)
இவற்றையெல்லாம் ஏற்பதும், நிராகரிப்பதும் அவரவர் உரிமை. யாரையும் திருப்தி படுத்துவதற்காக சத்தியம் செய்யும் அளவுக்குப் போக எனக்கு எந்த அவசியமும் இல்லை.
சிலருக்கு வேண்டுமானால் இது பாரதூரமான விஷயமாக இருக்கலாம். என்னைப் பொருத்த வரை பார்த்துப் பார்த்துச் சலித்துப் போனவைதான் இவை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross