செய்தி: நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் அவசியம்! அது எனது கோரிக்கையே!! 01ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் ஏ.லுக்மான் விளக்கம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சகோதரர் லுக்மான் தீர்மானம் நிறைவேறியது பற்றி சொல்லவில்லையா? posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[18 March 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39670
சகோதரர் SK சாலிஹ், லுக்மான் காக்கா அவர்களின் நீண்ட விளக்கத்தில், வாகனம் வாங்குவதான தீர்மானம் நிறைவேறியது பற்றி உங்களிடம் சொன்னாரா? அப்படி சொல்லியிருந்தால், அதையும் முழுமையாக வெளியிட்டால் வாசகர்களுக்கு புரியும்.
உங்களிடம், உங்களிருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ஒலிப்பதிவு நாடா கண்டிப்பாக இருக்கும்.
முன்னர், இரு உறுப்பினர்கள் லஞ்சம் கேட்டதாக உரையாடலை ஒலிபரப்பிய இந்த இணையதளம், இதையும் 'முழுமையாக' வெளியிடும் என்று நம்புகிறேன்.
தம்பி சாலிஹ், உங்களின் பதிலுக்கு வருகிறேன்.
“பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்த்தும், தலைவி தீர்மானத்தைத் திருத்திவிட்டார்” என்ற உறுப்பினர்களின் தற்போதைய வாதத்தை என்னால் ஏற்க இயலவில்லை". (C&P) ஆனால், "இவற்றையெல்லாம் ஏற்பதும், நிராகரிப்பதும் அவரவர் உரிமை. யாரையும் திருப்தி படுத்துவதற்காக சத்தியம் செய்யும் அளவுக்குப் போக எனக்கு எந்த அவசியமும் இல்லை" (C&P)
அல்லாஹ் மிகவும் அறிந்தவன். பொய் சொல்கிறவர்களை கண்டிப்பாக தண்டிப்பான்.
"அக்காலகட்டத்தில் நானும், இன்னொரு இணையதள நிருபரும் படம் / வீடியோ எடுத்ததாகச் சொல்கிறார். அது உண்மையில்லை." (C&P) . என் வாசகத்தை திரும்பவும் வாசியுங்கள்.
"காக்கா, அந்த வீடியோ பதிவு இருந்தால் தான் பிரச்சனையே இல்லையே. அந்த காலகட்டத்தில் இந்த இணையதளம் மற்றும் இன்னொரு இணையதள நிருபர் மட்டுமே புகைப்படம்/ வீடியோ மற்றும் குறிப்பெடுத்தனர்." (C&P)
என்னுடைய பதிவிலும் வீடியோ பதிவு இல்லை, (புகைப்படம் / வீடியோ) என்று தான் குறிப்பிட்டுள்ளேன். "நானும், நண்பர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீயும் கூட்டங்களைப் படமெடுத்தோம் என்பது மட்டுமே உண்மை." (C&P)
நகரமன்ற கூட்டத்தை வீடியோ உறுப்பினர்கள் எதிர்த்தாலும் (இப்போது எதிர்கவில்லை), என்னுடைய கருத்து, தணிக்கை செய்யப்படாமல் முழுமையாக வீடியோ கண்டிப்பாக வேண்டும். உறுப்பினர்கள் எதிர்த்த போதும் என் கருத்து இது தான்.
என்னுடைய முந்தைய பதிவில்(#39659), வாகனம் பழுது பார்க்கும் தீர்மானம் பற்றி நீங்கள் (செய்தி எண்: 8410; பொருள் எண்:13) குறிப்பிட்டதற்கு மாற்றமாக தலைவி மினிட் புத்தகத்தில் எழுதியது பற்றியும்,
http://123.63.242.116/Kayalpattinam/theermana%20apr%202012%2027.04.12.pdf
மீண்டும் அதே பொருள் குறித்த அக்டோபர் 2012 மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்றது. (செய்தி எண்: 9565- ல் பொருள் எண்: 24) பற்றி செய்தி பற்றியும் குறிப்பிட்டு,
"அதே பொருள் மீது ஏப்ரல் மாத கூட்டம் பற்றிய செய்தியில் இந்த இணையதள நிருபர் தெரிவித்த தகவல் சரியா? அல்லது “இதர உறுப்பினர்கள் எவரும் இவ்விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று சொல்லும் நகர்மன்றத் தலைவர் தகவல் சரியா?" (C&P) என்ற கேள்விக்கு பதில் சொல்வீர்கள் என்று பார்த்தேன். பதில் இல்லை.
வாக்குவாதம் செய்ய வேண்டும் என்பதல்ல எனது குறிக்கோள். மக்களுக்கு விபரம் புரிய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross