ஒரு (தன்னிலை)விளக்கம்! .. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[18 March 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39682
நான் என்றும் மதிக்கும் மக்கி நூஹுதம்பி காக்கா ரியாதில் இருந்த காலத்தில்,ரியாதின் காயல்நல மன்றத்தின்செயலாளராக பணியாற்றிவந்தேன்.எங்கள் இயக்கத் தலைவர் இன்ஜினியர் லண்டன் அபுபக்கர் காக்கா அவர்கள் சீர்மிகு பணியாற்றினார்கள் அவரின் நடுநிலைமை நேர்மை நடவடிக்கை இன்றும் என் நெஞ்சை விட்டு அகலாதவை.
எங்களின் குறிக்கோள் காயலின் அனைத்து பகுதியிலுள்ள மக்களின் எளியவர்களின்,இயலாதவர்களின் துன்ப துயரங்களை எங்களால் இயன்றவரை போக்குவதே தலையாய கொள்கையாக இருந்ததது.அனைத்து காயல் நெஞ்சங்களும் எங்களின் சகோதர சகோதிரிகளே என்பதுதான் எங்களின் தாரக மந்திரம்.இதில் குறிப்பிட்ட எந்த கொள்கைக்கோ,ஜமாத்திற்க்கோ ,தரீக்காவிற்க்கோ என்ற எந்த சிறு முக்கியத்துவமும் இல்லாமல் செயல்பட்டுவந்தோம்.
ஒரு ஜனநாயக முறைப்படி இயங்கி வந்த இயக்கத்தில் ஒரு சிலர் எங்களையும் கட்டாயமாக முக்கிய நிர்வாகப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று நிர்பந்தித்ததால் அதை தலைவரும், மற்றைய செயற்குழு உறுபினர்களும் மறுத்து ஜனநாயக் முறைப்படிதான் தேர்வு நடக்கும் என்ற முடிவை சொன்னதால், அம்முடிவை ஏற்க மறுத்து அதனால் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு விரிசலாக மாறி தனி அணியாக ஒதுங்கியது
ஒரு பத்து சதவீதத்தினருக்கும் குறைவாக உள்ளவர்கள், எங்கள் கொள்கை ஜமாத்திற்கு போதிய மரியாதை இல்லை என்ற போர்வையில் பிரித்தாலும் முயற்சில் இறங்கி அது தோற்றுபோய் விடவே தனிமைபடுதப்பட்டார்கள்.ஒரு சிலர்
நமதூருக்கு சில ஜமாத்து பள்ளிகளுக்கு கூட கடிதம் எழுதினார்கள் எந்த பருப்பும் வேகவில்லை.
இந்த காலகட்டத்தில்தான் சகோதரர் மக்கி நூஹுதம்பி காக்கா அவர்கள் பிரிந்து நின்ற அந்த பத்து சதவீததினரையும் ஒன்றிணைக்க பாடுபட்டார்கள்.உண்மை வழியில் நடப்பவர்கள் உளமார வரவேற்றோம்,ஒதுங்கியே இருக்கணும் என்ற ஒத்த முடிவுள்ளவர்களை ஒருங்கிணைக்க முடியுமா? மக்கி நூ.த.காக்காவிற்கு தோல்விதான் கிடைத்தது ஒற்றுமை விரும்பி.மக்கி நூ.த.அவர்களை உண்மை அணியின் உதவிதலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அப்படி பிரிந்தவர்கள் தனி அணியாக இயங்கி நம்மூரின் ஒரு குறிப்பிட்ட கொள்கை ஜமாத்தை சேர்ந்த மக்களுக்கு மாத்திரம் உதுவுவதென்ற குறிக்கோளுடன் சிறிது காலம் இயங்கியது.
முதன் முதலில் காயல் நலமன்றம் உதயமானதே ரியாதில்தான்.நமதூரின் ஏழை,எளிய நோயாளிகள், மாணவர்கள், மற்றும் வறுமையில் வாடுபவர்கள் அனைவர்களுக்கும் எங்களால் இயன்ற உதவிகளை செய்ததோடு KMT கட்ட கட்டிட வசூல்கமிட்டி முதன்முதலில் அமைத்தது ரியாத்தில்தான்.. நம் காயல் சகோதரர்களின் பல வேலையில்லாதவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்து அவர்களில் வாழ்வில் ஒளியேற்ற உறுதுணையாக இருந்தது ரியாது நலமான்றம்தான். தமாம்,கசீம்,மதினா போன்ற ஊர்களில்ருந்து கொத்து கொத்தாக வருபவர்களுக்கு உணவு இருப்பிடம் வழங்கி வேலையும் பலநூருபேர்களுக்கு வாங்கி கொடுத்த பெருமை அன்றைய ரியாது நகர் நல மன்றம் ஒன்றையே சாரும். அல்ஹம்திலில்லாஹ்!..
இப்படி வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உத்வு வதற்காகவே ரியாத்தில் முக்கிய இடத்தில ஒரு வீட்டையே வாடகைக்கு எடுத்து அதற்கு "காயல் முத்துசாவடி" என்று பெயரிட்டு அங்கு வேலைதேடுபவர்களுக்கு இருப்பிடம் மற்றும் உணவு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
நான் பணிபுரிந்த கம்பெனியில் மட்டும் சுமார் 50 நமதூர் பிள்ளைகளுக்கு வேலையும்,சுமார் பத்து பேர்களை நதூரிலிருந்து வரவழைத்தும் வேலையில் சேர்த்திருக்கிறேன்.இப்படிபல சகோதரர்கள் பலவகையிலும் உதவினார்கள் என்றால் அது மிகையல்ல.0
சகோதரர் மக்கி.நூ.த.காக்கா கேட்க்கிறார்கள் ,தற்போதுள்ள எல்லா நற்பணி மன்றங்க்களும் "கொள்கை மாச்சரியங்களை மறந்து" என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள் இன்னும் அந்த மாச்சரியங்கள் இருக்கிறதா? என்று.
உண்மையை சொல்லவந்தால் 100%க்கு100% சதவீதம் இங்கிருக்கின்ற வளைகுடா அனைத்து காயல் நல மன்றங்களில் எள் முனையளவுகூட கொள்கை மாச்சரியம் இல்லை,இல்லை,இல்லை. அந்த வார்த்தைகளை
ஏன் சொல்கிறோம் என்றால் நாங்கள் இங்கு ஒருதாய் பிள்ளைகள்போல் ஒற்றுமையாய்,ஒருமாச்சரியமும் இல்லாமல் இருக்கிறோம்.
இதை கேள்வியுரும் ஊர்மக்களே, ஊரில் ஒருசில உதவாக்கரைகள் இந்த மாசசிரியத்துடன் வாழ்பார்களேயானால் நீங்களும் திருந்துங்கள் என்ற ஒரு மறைமுக வேண்டுகோளடங்கிய எச்சரிக்கையே தவிர வேறு ஒன்றுமில்லை.அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross