Re:... posted byHameed Rifai (Jeddah)[19 March 2015] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39699
“மனசாட்சி உள்ள நடுநிலையாளர்களுக்கு” என தாங்கள் பதிந்துள்ள விலாவாரியான பதிலை கண்டேன். சிலருக்கு, நாம் நீண்ட பதிலை கொடுத்தால், மக்கள் உண்மையாக இருக்குமோ என்று நினைப்பார்கள் என்ற நம்பிக்கையில் - நீளமாக பதில் கொடுப்பார்கள். அந்த வரிசையில்தான் தங்கள் பதிலும் உள்ளது.
உங்கள் அறிக்கை வாசகம்:
"... அப்போதுதான் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு உறுப்பினர் தலைவருக்கான வாகனம் வாங்க சட்டத்தில் இடம் உள்ளதா என நகராட்சி இணை இயக்குனரிடம் கேட்டார், தீர்மானம் நிறைவேற்றினால் சட்டப்படி வாங்கலாம் என பதில் பெறப்பட்டது..." C&P
இது உங்கள் அறிக்கை வாசகம். அதில் நீங்கள் பதிவு செய்துள்ள வாசகம் - "தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க". தங்களின் இந்த வாசகம் பச்சை பொய்! தலைவி கூறி அந்த தீர்மானம் கொண்டு வரப்படவில்லை, லுக்மான் காக்கா அவர்களின் சொந்த விருப்பமே என்பதை லுக்மான் காக்கா அவர்களின் பேட்டி
தெளிவுபடுத்தியுள்ளது.
உங்கள் அறிக்கை வாசகம்:
"...எங்கள் மூவரோடு மன்றத்திற்கு கடிதம் கொடுத்த சகோதரர் A. லுக்மான் அவர்களுடன் மொத்தம் நான்கு பேர் மட்டுமே அக்கூட்டத்தின் இறுதிவரை இதை ஆதரித்தோம்..." (C&P)
இந்த பதிவில் இருந்து தெளிவாக தெரிகிறது, தங்களுக்கு அன்றைய தின நடப்புகள் எதுவும் மனதில் பதியவில்லை. இணையதள செய்தியை வைத்து, கற்பனையாக தான் கூறுகிறீர்கள் என்று!
நான் அறிந்த வரை, அந்தக் கூட்டத்தில் 15 உறுப்பினர்கள்தான் கலந்துக்கொண்டார்கள். லுக்மான் காக்கா, மம்மி ஹாஜியார் மற்றும் சாமு ஹாஜி ஆகியோர் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவேயில்லை.
இதனை அந்தச் செய்தியிலேயே காண முடிகிறது. புகைப்படத்திலும் அவர்கள் இல்லை. 1வது வார்டு உறுப்பினர் சம்பந்தமான பிற பொருட்களில் - அவர் பேசியதாக பதிவும் இல்லை.
அப்படி இருக்க,
“A. லுக்மான் அவர்களுடன் மொத்தம் நான்கு பேர் மட்டுமே அக்கூட்டத்தின் இறுதிவரை இதை ஆதரித்தோம் ...” C&P
என்று கூட்டத்திலேயே இல்லாத ஒரு உறுப்பினரை, இறுதி வரை அந்தக் கூட்டத்தில் தங்களுடன் அந்த தீர்மானத்தை ஆதரித்தார் என்று எப்படி கூறினர்கள்?
“சிலர் ஆரம்பத்தில் எதிர்க்காமலும், ஆதரிக்காமலும் மவுனம் காத்தார்கள். விவாதத்தின் இறுதியில் வாகனம் வாங்க தேவையில்லை என்பதற்காக எடுத்துவைக்கப்பட்ட காரணங்கள் சரியாக பட்டதால், அமைதியாக இருந்த சில உறுப்பினர்களும் அக்கருத்தை ஆமோதித்தார்கள்.” C&P
தங்களின் இந்த கூற்று பொய் என்று இணையதள செய்தியும், அந்தக் கூட்டத்தை செய்தியாக வெளியிட்ட எஸ்.கே.சாலிஹ் அவர்களின் கருத்தும் தெளிவு படுத்துகிறது.
பிற உறுப்பினர்கள் ஆதரவு / எதிர்ப்பு என தலையை அசைத்தார்களா? கையை உயர்த்தினார்களா?? அல்லது சைகை மொழியில் பேசினார்களா???
குறிப்பிடும்படி பேசியிருந்தால் அவர்கள் பேசியது செய்தியில் பதிவாகியிருக்கும். இறுதியில் வாக்கெடுப்பு நடந்திருந்தால்
அதுவும் பதிவாகியிருக்கும்.
எந்தெந்த உறுப்பினர்கள் பின்னர் எதிரிப்பு தெரிவித்தார்கள் என்று இறைவன் மீது சத்தியம் செய்து சொல்லுங்கள் சகோதரரே!
சகோதரர் எஸ்.கே.சாலிஹ் பதிவு செய்தது போல், ஒவ்வொரு பொருளுக்கும் 18 பேரும் கருத்து சொல்லும் வழக்கம் நகர்மன்றத்தில் அப்போது இல்லை. பின்னர்தான் வந்தது.
எழுத நிறைய உள்ளது. பின்னர் எழுதுகிறேன் இறைவன் நாடினால்.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross