சுத்தம் சுகம் தரும் என்று பள்ளிக் கல்வியிலும் - சுத்தம் ஈமானில் பாதி என்று மார்க்கக் கல்வியிலும் படித்திருந்தும் , பல முறை ஹதீதுகளை காதுக் கொடுத்துக் கேட்டிருந்தும் சுத்தத்தைப் பேணவில்லை என்றால் மக்களை என்னவென்று சொல்வது?.
இக்குறையை சரிசெய்யக் கோரி அப்பகுதி நகர்மன்ற உறுப்பினரிடம் பலமுறை முறையிட்டதாகவும், ஆனால் இதுவரையிலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதியைச் சார்ந்தவர் தெரிவித்தார் என்ற செய்தி உண்மையாக இருக்குமேயானால் அப்படிப்பட்ட நகர்மன்ற உறுப்பினரால் வார்டு மக்களுக்கு என்ன பயன்? மக்களே சிந்தியுங்கள்?
----------------------------------------
முதலில் இது குப்பைத் தொட்டியோ அல்லது தண்ணீர்த் தொட்டியோ அல்ல. தண்ணீர் குழாய்களின் இணைப்புக்கள் சந்திக்குமிடம் இதிலே தண்ணீர் திறந்து விடுவதற்கான அல்லது மூடுவதற்கான வால்வுகள் இருக்கும். பூமிக்கு அடியில் உள்ள அந்த வால்வுகளை எளிதாக உபயோகப்படுத்துவதற்காக பூமிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அறையே தவிர அது தொட்டி அல்ல.
மேலும் பொது மக்கள் அதிலே குப்பைக் கூளங்களை கொட்டுவது 100% தப்புத்தான். அதைப் பார்த்து சும்மா கண்டும், காணாதும் இருப்பது, அதை பற்றி வார்டு உறுப்பினருக்கோ அல்லது நகர்மன்றத்திற்கோ தெரிவிக்காமல் இருப்பது எல்லாம் பொதுமக்களின் தவறு என்றாலும் கூட, குடிநீர் குழாய்களை திறந்து விடுவதற்கும், அதை மூடி செல்வதற்கும் வரக்கூடிய நகர்மன்ற ஊழியர் அதை பார்ப்பதில்லையா?
பொது மக்கள் எல்லோருக்கும் பார்க்க கூடிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் புகார் செய்வதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தண்ணீர் குழாயை திறந்து, மூடக்கூடிய ஊழியர் ஒவ்வொரு முறையும் அதை பார்க்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதை கண்டிப்பாக அவர் புகார் செய்திருக்க வேண்டும் அது அவருடைய வேலையின் ஒரு பகுதி.
அவருடைய வேலையே அந்த தொட்டியில்தான் அதனுள்ளே உள்ள வால்வைத்தான் அவர் திறக்கிறார், மூடுகிறார். அதில் குப்பைக் கூளங்களோ, தண்ணீரோ தேங்கியிருக்குமானால் அது அவருடைய வேலைக்குத்தான் இடைஞ்சலாக இருக்கும். மேலும் குடிநீர் என்பதால் அது சுகாதாரத்திற்கு எவ்வளவு கெடுதல் என்பதை அவர் தெரியாமலிருப்பாரா? அவர் கடனுக்காக வேலை செய்யக்கூடாது! கடமையை நிறைவேற்ற வேண்டும்.
-------------------------------------------
பொது மக்களே!
நம் ஊரிலே இப்படிப்பட்ட சீர்கேடுகள் மிகவும் மலிந்துக் கிடக்கிறது அவைகளை எல்லாம் சீர்படுத்த வேண்டும். இவைகளை சீர்படுத்தாத வரை ஊரிலே ஏற்படக்கூடிய நோய்களுக்கு பஞ்சம் இருக்காது. முதலிலே மக்கள் சுயநலத்தை மறந்து பரந்த மனப்பான்மையுடன் வீட்டையும், ரோட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும்.
மேலும் திறமையில்லாத நகர்மன்ற உறுப்பினர்களையும், ஊழியர்களையும் மாற்ற வேண்டும். அதற்கு ஒரே வழி, வருகின்ற நகர்மன்ற தேர்தலில் உங்களுக்கு பிடித்தமான, உங்களுடைய சொந்தமோ, பந்தமோ யாராக இருந்தாலும் திறமை உள்ளவர்களாக அதாவது இலஞ்சம் வாங்காத, இறைவனுக்கு பயந்த, சுறு சுறுப்புள்ள உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து செயலிழந்த நகர்மன்றத்தை செயல்பட செய்யுங்கள்.
இறைவன் உதவியால் நம் ஊர் சிறப்பாக இருக்கும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் ஊரை சுகாதார கேடில்லாத ஊராக திகழச் செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross