Re:... posted byVilack sma (jeddah)[19 March 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39703
அஸ்ஸலாமு அழைக்கும் . ஆரோக்கியமான கருத்துக்களை மேலும் வரவேற்கிறேன் .பாரம்பரியத்தை நான் குறைகூறவில்லை . காலங்கள் மாறும்போது அதற்க்கேற்றார்போல் நாமும் மாறினால் தவறில்லையே என்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
மக்கீ காக்காவின் எண்ணப்படி , எதையாவது தவறு என்று சொன்னால் அதற்கான சரியான மாற்றுவழி என்னவென்பதையும் யோசிக்க வேண்டும் . நியாயமானதே . இதையும் பரிசீலிப்போம்.
தம்பி SK சொன்னதுபோல் , வெளியூர்காரர்கள் நம்முடைய சஹன் முறையை பார்த்து , " ஆஹா ... பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே " என்று சொல்லி ஆச்சரியத்துடன் வியப்பது உண்மைதான் . நானும் பலமுறை இதை கேட்டிருக்கிறேன் . அவர்களுக்கு ஒரு கேள்வி .இவ்வாறு வியந்து ஆச்சரியப்பட்டு பாராட்டிய அவர்கள் அதே இடத்தில் தங்களது உறவினர்களுடனோ , தெரிந்தவர்களுடனோ ஒரே சஹனில் அமர்ந்து சாப்பிட தயாராக இருப்பார்களா என்றால் நிச்சயம் மாட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை . ஆக , சமத்துவம் சகோதரத்துவம் பாராட்டுக்கள் போன்றவைகள் வெறும் உதட்டளவில்தான் .
தம்பி SK சொன்னதுபோல் , பொதுவாக பந்திக்கு லேட்டாக சென்றால் அங்கே யார் இருப்பார்கள் ? வசதி உள்ளவனும் , அந்தஸ்தில் உயர்ந்தவர் என்று நினைத்துகொள்பவரும் அங்கே இருக்க மாட்டார்கள் . பிறகு ,யார் இருப்பார்கள் என்பதை ஊகித்துகொள்ளுங்கள். ஆக , வேறு வழியில்லாமல் இவர்களுடன்தான் உட்கார்ந்து சாப்பிட வேண்டிய கட்டாயம் . நிற்பந்தமும்கூட . ஒருவேளை கொஞ்சம் முற்கூட்டியே சென்றால் இதுபோன்றவர்களுடன் அமர்வாரா என்பது சந்தேகமே . பொதுவாகத்தான் சொல்கிறேன் . கோபிக்க வேண்டாம் .
பாரம்பரியத்தை துளி பிசகுகூட இல்லாமல்தான் நாம் கடைப்பிடித்து வருகிறோமா ? இல்லையே ! எப்படி மண் சிட்டி சில்வர் கிண்ணமாகவும் , கலையம் பாக்கெட் தண்ணீராகவும் மாறியதோ அதேபோல் அமர்விலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் . டேபிள் சேர் போட்டு தனித்தனி பிளேட்டில் பரிமாறும்போது அனைவரும் பாகுபாடின்றி ஒரே இடத்தில் அமரும் சூழ்நிலைதான் . அனைவருக்கும் ஒரேமாதிரிதான் பரிமாறுவோம் . இதுவும் ஒருவகையில் சமத்துவம் , சகோதரத்துவம்தான் .
சாப்பாட்டு பந்தியில்தான் சகோதரத்துவம் காண வேண்டும் என்பதில்லை . நம் அருகே வந்து போகும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் சலாம் சொல்ல பழகுவோம் . இதுவும் சகோதரத்தை வளர்க்கும் .
கலாச்சாரம் கெடாதவாறு மாற்றங்கள் செய்ய வேண்டும் . கல்யாண சீரில் ( பூச்செப்பு ) அன்று வீட்டுக்கு தேவையான அத்தனை சாமான்களும் கொடுத்தோம் . ஆனால் இன்றோ நாம் கொடுக்கும் சாமான்கள் அத்தனையும் அவர்கள் வீட்டிலும் உள்ளதே என்று சீர்கொடுப்பதை நிறுத்தாமல் அதற்கு மாற்றாக பணமாகவோ , நகையாகவோ , சொத்தாகவோ கொடுக்கும் பழக்கம் சமீபத்தில் பரவி வருகிறது . ஆக , சீர் கொடுக்கும் கலாச்சாரம் காலத்திற்கு ஏற்றாற்போல் ஒருசில மாற்றங்களுடன் தொடர்கிறது அவ்வளவுதான் .
ஆக , அன்பர்களே , காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றங்கள் வேண்டும் . அதற்கு ஏற்றாற்போல் நம்மை தயார்படுத்த வேண்டும் .
பாக்கெட் தண்ணீர் , பிளாஸ்டிக் கப்புகள் , இதனால் திருமண மண்டபத்திற்கு அருகில் சேரும் குப்பைகள் பற்றி தனியாக விவாதிப்போம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross