Re:...புதுமை பெண்கள் posted bymackie noohuthambi (colombo)[21 March 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39739
பாரதியார் கண்ட புதுமை பெண்கள் அல்ல இவர்கள்.
இஸ்லாம் எங்கள் வழி
இன்ப தமிழ் எங்கள் மொழி
அல்லாஹ்வின் திருமறை
நபிகள் நாயகத்தின் வழிமுறை
இவை இரண்டில்தான் ஈருலக வெற்றி இருக்கிறது என்ற நிதர்சன உண்மைகளை உணர்ந்தும் அதன்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொள்ள இந்த இளங்கலை பட்டதாரி பெண்களை வாழ்த்தி து ஆ செய்கிறேன்.
ஒரு காலம் இருந்தது மாப்பிள்ளை என்ன படித்திருக்கிறார் என்று கேட்பார்கள். இந்த காலத்தில் பெண் என்ன படித்திருக்கிறாள் என்று ஒன்றும் படிக்காத ஆணே கேட்கிறான். அந்த அளவுக்கு பெண் கல்வி முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
அந்த தேவையை அறிந்து நமதூர் பெண்கள் வெளியூர் சென்று இஸ்லாமிய கலாச்சாரங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று கவலைப் பட்டு ஊரிலேயே பெண்கள் கல்லூரி ஆரம்பித்து சிறப்பாக நிர்வகித்து வரும் வாவு குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே ஒரு POLYTECHNIC நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையும் அபிலாஷையும் மக்களிடையே உள்ளது.
பணம் படைத்தவர்கள் நிறையவே நமதூரில் இருக்கிறார்கள். கீழக்கரை BSA ரஹ்மான், இலங்கை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் அவர்கள் எல்லாம் மறைந்தும் மக்கள் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். சதகதுன் ஜாரியாவை அல்லாஹ்விடம் அள்ளிக் குவித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.அவர்கள் பணம் படைத்தவர்கள் என்பதால் அல்ல. அந்த பணத்தைக் கொண்டு இந்த இஸ்லாமிய சமுதாயத்துக்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஆக்கபூர்வமாக கல்வி வளர்ச்சியை - கல்வியில் மறுமலர்ச்சியை தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தினார்கள். மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கினார்கள்.இந்த சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க பாடுபட்டார்கள். அவர்களை போல் நமதூர் வள்ளல்களும் சிந்தித்தால் இந்த ஊரில் பல்கலைக் கழகங்கள் அமையும் நாள் வெகு தூரத்தில் இல்லை..
அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல் - ஆலயம் பதினாயிரம் அமைத்தல் -
அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross