மனிதகுல மாணிக்கங்கள்! .. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[23 March 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39804
DCW நச்சி ஆலைக்கெதிராக நமதூர் அனைத்து மக்கள் சார்பாக "KEPA " தொடுத்திருக்கும் வழக்கு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பது மட்டுமல்ல. சில நேரங்களில் சில சங்கடங்களையும் DCW க்கு உண்டாக்குகிறது என்ற செய்திகளும் வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் அந்த வழக்கு இப்படி போனாலும் ஆச்சரியமில்லை.
அதாவது,
நீதிபதி: காயல்பட்டண அனைத்து மக்களும்,அநேகமான மீடியாக்களும் உங்கள் ஆலைக்கெதிராக விமர்சிப்பதில் உண்மையில்லையா?
DCW வக்கீல்:உண்மையில்லை,தமிழகத்தில் பணம்படைத்த ஊர்களில் காயல்பட்டணமும் ஒன்று,அதிலுள்ள சில பண முதலைகள்,எங்கள் ஆலையின் வளர்ச்சி பொறுக்காமல் பொறாமையுடன் பல வழிகளிலும் பணத்தை செலவழித்து ஒரு போலி எதிர்ப்பையே உருவாக்குகிறார்கள்!
நீதிபதி:ஆதாரம்.
DCW வக்கீல்:அந்த நகராட்சியின் உறுப்பினர்களை அந்த ஊர்மக்கள்தான் வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள் அவர்களின் பெரும்பாலான உறுப்பினர்கள் எங்கள் ஆலையின் உண்மையறிந்து எங்களுக்கு ஆதரவாக உள்ளார்கள்.
நீதிபதி:சாட்சி கூர்களுடன் ஆதாரத்தை தரமுடியுமா?
DCW வக்கீல்:ஆதாரம்:1.எங்கள் ஆலையின் விரிவாக்க பணிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வு அந்த நகராட்சியில் விவாதமாக வந்த பொழுது எங்கள் ஆலைக்குஆதரவாகவும், விரிவாக்க தடை தீர்மானத்தை எதிர்த்தும் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தார்கள்
ஆதாரம்:2:அண்மையில் எங்கள நிறுவனத்தின் 57-வது கால்கோள் விழாவில் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இதோ புகைப்படங்கள்.மேலும் பலநேரங்களில் பல வழிகளிலும் எங்களுக்குஉறுதுணையாய் இருந்து எங்களுடன் இரண்டற கலந்துவிட்டவர்கள்.
நீதிபதி: நீங்கள் அவர்களை சொல்லுவதுபோல்,நீங்கள் ஏன் அந்த உறுப்பினர்களுக்கு பணஉதவி செய்து உங்களுக்கு ஆதரவா திருப்பி இருக்கக்கூடாது?
DCW வக்கீல்: அவர்கள் சாதாரண நியமன உறுப்பினர்கள் அல்ல.ஊர் அனைத்து மக்களும் வாக்களித்து தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினர்கள்.ஆகவே,அந்த மக்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக நடந்தால் சும்மா விடுவார்களா? ஊருக்கு எதிராக செயல்படும் துரோகியே எங்கள் வார்டுக்குள் நுழைய உனக்கு தகுதி இல்லை என்று விரட்டியடிக்க மாட்டார்களா?ஆகவே ஊர்மக்களும் எங்களை ஆதரிக்கிறார்கள்
இப்படித்தான் வழக்கும் வருங்காலத்தில் செல்ல இருக்கிறது
அடுத்து,அண்மையில் SDPI அந்த நச்சு ஆலைக்கெதிராக ஆர்ப்பரித்து ஆர்ப்பாட்டம் செய்தபொழுது அதை பெரும்பாலான மீடியாக்கள்,நமதூர்மக்கள் மற்றும் அண்டைய பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தது அனைவரும் அறிந்தததே. குறிப்பாக பேயன்விளை ஊர்மக்கள் சார்பாக போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்தார்கள்.
அவர்களில் ஒருசிலர் சொன்னது அந்த ஆலையின் எடுபிடிகள் எங்களிடம் வந்து,உங்களுக்கு கணிசமான பணஉதவி,மற்றும் ஊருக்கு தேவையான உதவிகளையும் அந்த ஆலை நிர்வாகம் செய்யும்,நீங்கள் இந்த போராட்டத்தை எதிர்ப்பதாக ஒரு அறிக்கை விட்டாலே போதும் என்று நிர்பந்தப்படித்தினார்கள்!
அந்த பணத்துக்கு சோரம் போகாமல் நாங்கள் சொன்னது, காயலூரில் உங்கள் ஆலையின் கழிவு நீர் கடலில் கலக்கும்முன்னால் ஏற்ப்படும் விஷக்கிருமியினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள்,எத்தனைபேர்கள் மாண்டிருக்கிறார்கள் அந்த உயிர்கொல்லி கிருமியின்
தாக்கத்தால் கொத்து,கொத்தாக மரணச்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் மனசாட்சி என்று ஒன்று உண்டு.
உங்களிடம் பணத்தை வாங்கிகொண்டு அவர்களுக்கு விரோத மாகவும்,உங்களுக்கு ஆதரவாகவும் நடந்தால்,எங்கள் கடவுள் எங்கள் குடும்பத்தை வேறு வழியில் தண்டித்து விடுவான்.இப்படி பணதைபெற்று சுகம் பெறுவதென்பது, வேறு தொழிலாகிய விடுதி தொழில்செய்து சுலபமாக சம்பாதிக்கும் தொழிலைவிட ஈனத்தனமானது என்று கூறினோம்.
ஊரால்,இனத்தால்,மதத்தால் வேறுபட்டிருந்தாலும் நம்முடைய இதயத்தால் என்றும் நிலைத்துநிற்கும் அந்த மனிதகுல மாணிக்கங்கள் நிறைவுடன் நீடொழிவாழ்வார்கள்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross