அந்த கடவுளின் கொடிய தண்டனை பிடியிலிருந்து தப்பவே முடியாது. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[25 March 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39836
DCW யின் 57-வது கால்கோள் விழாவில் சாமி அவர்கள் பங்கு கொள்ளாத விளக்கத்திற்கு நன்றி. அவர் பங்கு கொண்டாரா என்ற சந்தேக கேள்விக்கே பதறியடித்து பதிலளித்து இருக்கிறார் சாமி.
ஆனால் பக்கம் பக்கமாக கிழி,கிழி என்று கேவலமாக கிழிக்கிறார்கள் பொதுமக்கள் அங்கு கலந்து கொண்ட உறுப்பினர்களை நோக்கி, அந்த உறுப்பினர்களுக்கு கொஞ்சமாவது XX, XXX, XXXX, XXX, XXXX இருந்திருக்குமேயானால் ஒருவராவது மறுத்தோ அல்லது பதில் விளக்கமோ அளித்திருப்பார். இதுவரை இல்லையே.(சுமார் 2300 பேர்கள் இதுவரை இந்த செய்தியை பார்த்திருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் கூட உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டதில் தவறு இல்லை என்று கருத்து பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
அடுத்து,சாமி அவர்களின் விளக்கத்திற்கு, விளக்கம் அல்ல சமாலிப்பிற்கு சகோதரர் சாலிஹ் அவர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சாமி அவர்களின் கருத்துப்பதிவில் கொடைக்கானலில்
இடி இடித்தால் குஜராத்தில் மழை பெய்ததாம் அதுபோல் இருக்கிறது "KEPA "வினால் எங்களுக்கு தனிப்பட்ட மரியாதைக் குறைவு, என்று மாமியார் மருமகள் சண்டைபோல் சித்தரித்து இருக்கிறார். என்ன அவமானம், எப்படி, எங்கே நடந்தது எப்படியெல்லாம் அல்லோலப்பட்டோம் என்பதை விளக்கவேண்டுமல்லவா? அதில் ஒரு உதாரணம் கூட இல்லையே, மொட்டையாக பொத்தாம் பொதுவாக அல்லவா பொரிந்திருக்கிறீர்.
ஆகவே அந்த "KEPA" வின் மரியாதைக்குறைவுதான் எங்களுக்கு முக்கியமே தவிர, காயல் மக்கள் இந்த நச்சு ஆலைக் கிருமியின் தாக்கத்தால் பல நூறு பேர்களை கொடிய உயிர் கொள்ளி நோய் பாதித்தாலும், பல நூறு பேர்கள் மாண்டு மண்ணோடு மண்ணாய் நாசமாய் போனாலும் கவலை இல்லை. எங்களை "KEPA "கவுரவக் குறைவாய் மதித்ததால், நாங்கள் அந்த DCW ஆலைக்கு எங்களின் அகம் கனிந்த ஆத்மார்த்த ஆதரவை அளித்திருக்கிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது.
கேட்பது "சாமி" பதில் சொல்லுங்கள் பக்த கோடிகளே ?
தன்னிலம் பாராமல் இரவுபகல் எந்நேரமும் இந்த ஊருக்காக, ஊர்மக்களின் நலனுக்காக,தங்கள் உயிர்தாகுதல் மிரட்டலுக்கும் மசியாமல், பணத்தாசைக்கு "X" திங்காமலும், XXX XXX XXX XXX கண்ணிய காயலான் என்ற அசல் முத்திரையுடன், தங்களை இவவூர் சகோதர சகோதிரிகளுக்காக தியாகம் செய்து புண்ணிய பணியாற்றிவரும் அந்த "KEPA" அமைப்பை விட நீங்கள் எந்ததெந்த வழியில் அந்த நச்சு ஆலைக்கேதிராக செயல்பட்டீர்கள், எத்தனை போராட்டத்தில் கலந்து கொண்டீர்கள் என்று பட்டியலிட முடியுமா? அல்லது "KEPA"அமைப்பு அந்த ஆலைக்கு அடிவருடியாய் அந்தரங்கமாக செயல்பட்டு வருகிறது என்ற ஒரு உதாரணத்தையாவது கூறமுடியுமா?
கொதிக்கிறது மனது. அந்த நச்சு ஆலையியன் தாக்கத்தால் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு பல லட்சம் ரூபாயை இழந்து இன்னும் பூரண சுகம் பெறாமல் துடித்து, துவண்டு கொண்டிருக்கும் எத்தனையோ குடும்பத்தின் சார்பாக சாபமிடுகிறேன், அந்த நச்சு ஆலைக்காதரவாய் அணுவளவு அந்தங்கமாகவோ / நேரிடியாகவோ ஆதரவு தெரிவிப்பவர்களின் குடுப்பம் அந்த கடவுளின் கொடிய தண்டனை பிடியிலிருந்து தப்பவே முடியாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross