இந்த வலி பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களுக்கு மட்டுமே தெரியக்கூடியது அறியக்கூடியது.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[25 March 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39844
ஒரு கொடியவனாலையோ அல்லது ஒரு கொடிய நிர்வாகத்தாலையோ ஒரு குடும்பம் மட்டுமல்ல எண்ணற்ற குடும்பங்கள் பாதிக்கப்பட்டு,அப்படி பாதிப்புக்குள்ளான குடும்பத்தைச் சேர்ந்தவன் தங்கள் பொருளையும், உயிரையும் பறிகொடுத்து "பதுவா" செய்கிறவன், யா அல்லாஹ் என்குடும்பத்தை இந்த நிலைக்கி கொண்டுவந்தவனுக்கும் அதற்கு உறுதுணையானவனுக்கும் குடும்பம் இருக்கிறது என்னுடைய வலியை உணரச்செய்ய நீதான் தண்டிக்கவேண்டும் என்ற ஆற்றாமை குரலும் ,அபயக்குரலும் வெளிவருவதற்கு வேறு எந்த காரணமும் தடையாக இருக்க முடியாது.
பாதிக்கப்பட்டவனின் குடும்பம் அபயம் நாடி யாஅல்லாஹ் எங்களை இக்கதிக்குள்ளாக்கியவனை எதிர்க்க எங்களுக்கு சக்தி இல்லை இக்கொடியவனுக்கும் அவனுக்கு துணைபோகிற கும்பலுக்கும் ஏற்றதொரு கூலியை கொடு என்று கண்ணீர் மல்க கையேந்தினால் அந்த அபலகுரலுக்கும். அல்லாஹ்விற்கும் இடையில் எந்த மறப்பும், தடையும் இல்லை நேரிடியாகவே அல்லாஹ்வை சென்றடையும் என்பதுதான் நபிமொழி.
இந்த கொடூர ஆலையினால் பாதிக்கப்புக்குள்ளான உறவினர்களின் வீட்டு குமர்களுக்கு இதுவரை மாப்பிள்ளைகள் அமையவில்லை என்ற உண்மை எல்லோருக்கு தெரியாத ஒரு ரகசியமான அவல நிலையாகும் !
அந்த குமரும்,அவளின் பெற்றோர்களும் ஓசையின்றி ஒப்பாரிவைத்து வெளியில் சொல்லமுடியாமல் தவித்து துவண்டுகொண்டிருக்கும் அந்தகுடும்பமும் அவர்களின் உற்றாரும் உறவினர்களும் வேதனை தீயில் விழுந்த புழுக்களாய் துடித்துக்கொண்டிருக்கிரார்களே அவர்களின் ஆற்றாமைக்கும்,அபயக்குரலுக்கும் அணைபோடமுடியுமா?
இந்த வலி பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களுக்கு மட்டுமே தெரியக்கூடியது அறியக்கூடியது.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross