முதலாவதாக DCW பற்றிய செய்திகளை காயல்பட்டணம்.காம் மூலமாகத்தான் நம்மில் பெரும்பாலோர் அறிகிறோம். மற்ற எந்த ஊடகத்திலும் DCW பற்றிய செய்திகள் நல்லவையாக ( விளம்பரம், விளையாட்டு,விழாக்களாக ) இருந்தால் மட்டுமே வரும்.
அவர்களுக்கு பாதகமான சுற்றுச்சூழல் சம்பந்தமான செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டாலும் அந்த செய்தி நமது கண்ணில் படவும் செய்யலாம் அல்லது கண்ணில் படாமலும் போய்விடலாம். அது மட்டுமில்லாது வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்த மாதிரி செய்திகள் தெரிவது மிகவும் அரிது.
அதே நேரத்தில் காயல்பட்டணம்.காம் இணையத் தளத்தை நம் ஊர் மக்கள் அதிலும் குறிப்பாக வெளிநாட்டிலே இருப்பவர்கள் அதிகமாக உபயோகப்படுத்துவதால் ஊர் செய்திகள் பலதும் அறிவதுடன் குறிப்பாக ஊர் சுகாதாரத்தையோ , ஊர் கலாச்சாரத்தையோ பாதிக்க கூடிய செய்திகள் மிகுதமாக வருவதால் அது நமக்கு சில சமயம் பெரிதுப்படுத்தி இருப்பதாக தோன்றும் அப்படி தோன்றினால் அது தவறு.
-------------------------------------------------
நமது ஊரில் உள்ள மக்களை பாதிக்க கூடிய ஒட்டு மொத்த நோய்களுக்கும் DCW மூலம் வெளியாகும் கழிவுகள் மட்டுமே காரணம் என்று காயல்பட்டணம்.காம் கூறவில்லை.
DCW மூலம் வெளியாகும் கழிவுகள், செல்போன் கோபுரத்தின் மூலம் ஏற்படும் கதிர்வீச்சு, நமது உணவு பழக்க வழக்கங்கள் , கலப்பட உணவு பொருட்கள், வீடும் வீட்டின் சுற்றுப்புறமும் சுகாதாரமின்மை மற்றும் முறையான சிகிச்சை பெறாமை போன்ற எத்தனையோ காரணங்கள் கூறப்பட்ட போதிலும் DCW கழிவுகளினால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் அது உண்மையிலும் உண்மை.
தொழிற்சாலைகள் இருக்கும் ஊர்களில் அதுவும் சாயப்பட்டறை , வெடிபொருள் , பிளாஸ்டிக் போன்ற இரசாயனப் பொருட்களை கொண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ள ஊர்களில் கண்டிப்பாக கேன்சர், மூச்சுத் திணறல் போன்ற பல கொடிய நோய்கள் இருக்கத்தான் செய்யும்.
காரணம் தொழிற்சாலையை நடத்தக்கூடியவர்கள் அதற்கான சட்டத்திட்டங்களை பின் பற்றுவதில்லை, அவர்களின் எண்ணமெல்லாம் பணம் சம்பாதிப்பதுதான். அதனால்தான் நம் நாட்டிலே தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளிலே மிகுதமான நோய்கள் பரவி கிடக்கிறது.
அந்த விதிமுறை மீறல்களுக்கு நமது DCW மட்டும் விதிவிலக்காக இருக்குமா? என்பதே நமது மக்களின் ஐயம்?
அதனால்தான் DCW பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து நமது ஊருக்கு வரக்கூடிய அபாயங்களை , ஆபத்துக்களை கூடிய மட்டும்
குறைப்பதற்குண்டான முயற்சிகளை நமது சகோதரர்கள் முழுமூச்சாக செய்து வருகிறார்கள்.
ஊருக்குள்ளே உள்ள பலதரப்பட்ட சுகாதாரக்கேட்டை நிவர்த்தி செய்ய முயற்சித்த போதிலும் மிகவும் ஆழமாக, முதன்மையாக DCW க்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம். அது மிகுந்த பாதிப்பை, உயிர் சேதத்தைக் கொடுக்கும் என்பதே!!!. அல்லாஹ்! காப்பாற்றுவான்.
பல ஊர்களிலும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது, ஸ்டெர்லைட் தொழிற்சாலை, சாயப்பட்டறைகள் மற்றும் பல தொழிற்சாலைகள் இந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
போபாலில் 1984 ல் யூனியன் கார்பைடு கம்பெனியில் ஏற்பட்ட விபத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் மாண்டனர்.
இன்னும் அதன் தாக்கத்தால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ்! அந்த மாதிரி ஒரு நிகழ்வு நம் ஊருக்கு வராமல் காப்பாற்றுவானாக.
ஊர் மக்களின் நன்மைக்காக எத்தனையோ நல்ல விசயங்களை செய்து வரும் நன்மக்களுடன் திருவாளர். காயல்பட்டணம்.காம்' க்கு மிக,மிக நெருங்கிய பெறும் தொண்டு உண்டு என்பதை மிக விரைவில் அறிவீர்கள்.
அவர்கள் எதையும் திசைத்திருப்பியோ, மிகைப்படுத்தியோ கூறவில்லை என்பதை உணர்வீர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவரையும் ஒற்றுமையாக இருந்து ஊருக்குத் தொண்டு செய்யக் கிருபை செய்வானாகவும் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross