கற்பனை குதிரையின் கடிவாளம் என்வசம் இல்லை! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[31 March 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39900
1981-82 என்று நினைக்கின்றேன் நான் ரியாதிலிருக்கும் பொழுது, என் வீட்டிலிருந்து வந்த கடிதத்தில்,பெரிய நெசவு தெருவைத் தாண்டி, ஓடக்கரைக்கு முன்னால் வீட்டு மனைகள் விற்க்கிறார்களாம் ஒரு மனை மூவாயிரத்திலிருந்து ஐந்தாயிரமாம் (தற்போது 20 இலட்சம் வரை என்று கேள்வி) காடாக இருந்தாலும் பிற்காலத்தில் நல்ல குடியிருப்பாக வரும் என்று சொல்கிறார்கள், பக்கத்தில் பெரிய ஆஸ்பத்திரி கூட வரலாம் என்று சொல்கிறார்கள். நீங்கள் விசாரித்து வாங்க விருப்பம் என்றால் ஏற்பாடு செய்யவும் என்ற கடித வாசகத்திற்கு என்னுடைய பதில்,
அத்தான காட்டிலும் மேட்டிலும் நான் இங்கு கஷ்ட்டப்பட்டு உழைத்த காசை எல்லாம் போட முடியுமா? விற்பவர்கள் எல்லாம்தான் சொல்வார்கள், ஆஷ்பத்திரி வரும் ஆகாய விமானதளம் வரும் என்று அந்த ஆசையில் மயங்கிவிட முடியுமா? ஊருக்குள் ஏதாவது நிலம் வந்தால் சொல்லவும் என்று பதில் கடிதம் எழுதிவிட்டேன். சிந்தனையில் சாதித்து விட்ட சாணக்கியன் போல (பேமாளி என்று பிந்திய காலம் உணர்த்தியது)
என்னுடைய முந்திய மலரும் நினைவு நிகழ்வு கருத்து பதிவையும் தற்போது மேலே கண்ட செய்தியையும் தொடர்பாக்கி பார்ப்பவர்களுக்கு நான் பொறுப்பாளி அல்ல!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross