Re:...இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் posted bymackie noohuthambi (colombo)[31 March 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39904
31 வயதில் இத்தனை சாதனைகளா! மருமகனுக்கு என் உச்சி முகர்ந்த வாழ்த்துக்கள்.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து ----நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்று வள்ளுவம் சொல்கிறது.
சாதாரண தோற்றத்துடன் சொளுக்கர் தெருவில் நடை பயின்ற இந்த இளவலுக்கு இத்தனை சாதனை விருதுகளா...எங்கே நமது இளைஞர்கள். அப்படி என்ன இந்த இளவல் செல்வ செழிப்பிலே மிதந்தவரா வெள்ளி கரண்டியுடன் பிறந்தவரா born with silver spoon ? நஹ்வி என்ற குடும்ப பின்னணி மட்டுமா இவரை இமயத்துக்கு உயர்த்தி இருக்கிறது, நம் இதயத்துக்கு குளிர்ச்சியை தந்திருக்கிறது. இல்லை. அவரது விடா முயற்சி ஆர்வம் இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை. நபிகள் நாயகம் அவர்கள் மீது அளப்பரிய அன்பு இறை நேச செல்வர்களின் மீது ஒரு பற்று - எல்லாவற்றுக்கும் மேலாக தனது பெற்றோர்களையும் உற்றோர்களையும் நேசிக்கும் சுபாவம் தனக்கு கீழே உள்ளவர்களையும் அன்புடன் அரவணைத்து செல்லும் அற்புதமான நற்குணம் ...இவை எல்லாம் சேர்ந்து அவருக்கு இந்த வாழ் நாள் சிறப்பை சிறிய வயதிலேயே அளித்திருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.
எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்களின் நல்லாசியையும் இவர் பெற்றவர் என்பதனால் மக்கி ஆலிம் அவர்கள் குடும்பத்தினரின் சார்பாக அவரை வாழ்த்துகிறேன் து ஆ செய்கிறேன். காய்தல் உவத்தலின்றி எல்லோருடனும் பழகும் உங்கள் நற் குணத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் மார்க்க ஞானத்தையும் மென்மேலும் தந்தருள்வானாக.
நமது இளைஞர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக - உங்களை ஒரு முன்மாதிரியாக அல்லாஹ் ஆக்கி வைப்பானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross