Re:... posted byVilack sma (jeddah)[02 April 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39973
பார்க்க சந்தோசமாகத்தான் இருக்கிறது . இருப்பினும் ........
எங்க காலத்துல குட்டியாப்பு முதல் பள்ளி இறுதி வரை வெள்ளை சட்டையும் நீல அரைக்கால் , முழுக்கால் பேண்ட். இவைகள்தான் பள்ளி சீருடை .
குட்டியாப்பு வாத்தியார் மறைந்த அப்துல் சலாம் சார் அவர்கள் நிறங்களை அறிவதற்காக காக்கை கருப்பு , கிளி பச்சை , கடல் நீலம் என்றுதான் சொல்லி தந்தார் . பச்சை கிளியும் , கருப்பு காக்கையும் இன்றும் பறக்கின்றன . கடல் தண்ணீர் நீல நிறத்தில்தான் உள்ளது . பிள்ளைகளுக்கு இப்படி சொல்லி கொடுத்தாலே நினைவில் ஏறும்தான். என்ன பண்ணுவது ? குட்டியாப்புகளின் பெருக்கத்தால் ஏதாவது ஸ்டன்ட் செய்தால்தான் நிலைக்க முடியும் என்றாகிவிட்டது . ஆனால் குழந்தைகளுக்கு கலர் சொல்லி கொடுக்கிறேன் என்று தினம் ஒரு கலரில் உடை அணிய சொன்னால் அது பெற்றோர்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் . நல்ல கல்வி கொடுக்கிறோம் என்று பெற்றோர்களை மன அழுத்தத்திற்கு ஆலாக்கினால் , அந்த கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross